Home » தலைக்கு மேலே தேர்தல் வேலை
இந்தியா

தலைக்கு மேலே தேர்தல் வேலை

ஆர்டிகிள் 370 நீக்கப்பட்டு ஐந்தாண்டுகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டன. வன்முறை இல்லாத ஜம்மு-காஷ்மீரைக் கண்டடைந்து விட மாட்டோமா என எப்போதும் இந்திய மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஒரு நாட்டின் எல்லையில் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த நாட்டின் பிற பகுதியில் வாழும் மக்களும் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். எனவே ஜம்மு-காஷ்மீரின் எல்லைப் பகுதிகள் அமைதியாக இருக்க வேண்டியது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அவசியமானது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் மூன்று கட்டங்களாகச் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்தி, அக்டோபர் 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு பத்தாண்டுகள் கழித்து 74 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் காஷ்மீர் மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழல் நிலவுவதை உறுதி செய்ய வேண்டியது இந்திய அரசின் கடமை.

ரியாசி, கத்துவா, டோடா உள்ளிட்ட ஜம்முவின் சில பகுதிகளில் சமீபத்தில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றன. இந்தத் தாக்குதல்களில் தொடர்புடைய தீவிரவாதிகள் இன்னும் பிடிபடவில்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தியாகத் தொடர்கிறது. இந்தப் போக்கு தான் ஆபத்தானதாக மாறியிருக்கிறது. பொதுவாகத் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளை இராணுவத்தினர் சுட்டு வீழ்த்திவிட்டதாகச் செய்திகளில் படிப்பதுண்டு. ஆனால் இப்போது இந்தப் போக்கில் மிகப்பெரிய மாற்றம் இருப்பதாக உணரப்படுகிறது. எல்லைப் பகுதிகளில் தாக்குதல்கள் எப்போதும் இருப்பது தான். ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் தடயமில்லாமல் மறைந்து போவது தான் பாதுகாப்புப் படையினருக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. இது பொதுமக்களுக்கு இடையிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்