காதோடு தான் நான் பேசுவேன்
ஏ.ஐ பேசுகிறது. எந்திரக் குரலில் அல்ல. இனிய குரலில். மனிதர்களைப் போலவே. எழுதுவதைவிடப் பேசுவதிலுள்ள சிறப்பம்சம் குரலில் இருக்கும் உணர்வுகள். ஏற்ற இறக்கங்கள். எனவே தான் குரல்கள் வசீகரமாக இருக்கின்றன. தற்போது ஏ.ஐ பேசும் குரல்களிலும் எமோஷன்கள் தாராளமாக இருக்கின்றன.
நல்லது தானே? இதிலென்ன சிக்கல்?
சிறப்பானதொரு வசதிபோலவே தோற்றமளிக்கும் இது ஒரு பெருஞ்சிக்கலை உருவாக்கியுள்ளது. தொடர்ந்து ஏ.ஐயுடன் பேசிக்கொண்டிருக்கும் நபர்கள் ஏ.ஐயைக் காதலிக்கத் தொடங்கிவிடுகிறார்களாம்.
“இதென்ன காமெடியா…?” என்றால் இல்லை. நிஜம் தான்.
சமீபத்தில் ஓப்பன் ஏ.ஐ நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கையில், “தயவுசெய்து எங்களின் ஏ.ஐ குரல்களைக் காதலிக்காதீர்கள்…” என்றொரு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Add Comment