Home » சாத்தானின் கடவுள் – 20
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 20

20. உயிர்த் தீயினிலே வளர் சோதி

யோசித்துப் பார்த்தால், இரண்டு விஷயங்கள் சார்ந்த வியப்பு உலகமுள்ள வரை தீரவே தீராது. முதலாவது சுவாசிப்பது. இரண்டாவது உணவு தேடுவது. பசி என்ற உணர்ச்சி இருக்கும்வரைதான் உயிர்கள் எதையாவது செய்துகொண்டிருக்கும். அது இல்லை என்றாகிவிட்டால் ஒன்றும் செய்யவேண்டிய அவசியம் இருக்காது. அதேபோல சுவாசம் என்ற ஒன்று சீராக உள்ளவரை மட்டுமே வாழ்க்கை. அது நின்றுவிட்டால் அனைத்தும் முடிந்தது. இந்த உலகில் வேறு எதற்குமே இந்தத் தன்மை கிடையாது. ஒன்றில்லாவிட்டால் இன்னொன்று, அல்லது அது இல்லாவிட்டாலும் பரவாயில்லை; சமாளித்துக்கொள்ளலாம் என்ற அளவிலேயே நிற்கும். சுவாசமும் பசியும் மட்டும்தான் அத்தியாவசியங்கள்.

ஆனால் இயற்கை அல்லது இறை எப்படி இதனைத் தகவமைத்திருக்கிறது என்று பாருங்கள். ஒரு கணினியைக் காசு கொடுத்து வாங்கும்போது அதில் ஒரு ஆப்பரேடிங் சிஸ்டம் இன்பில்ட்டாக இருப்பது போல உயிர் பிறக்கும்போது சுவாசிப்பது என்ற செயல்பாடு உடன் வந்துவிடுகிறது. அதற்காக யாரும் மெனக்கெட வேண்டியதில்லை. தேடி அலைய வேண்டியதில்லை. அது இருப்பது. அவ்வளவுதான்.

ஆனால், ஓர் உயிர் உதிக்கும்போதே அதற்குப் பசியுணர்ச்சி உண்டாகிறது. உணவு என்ற சொல் அறிமுகமாவதற்கு முன்பே, பசி என்பது ஓர் உணர்ச்சி என்பது விளங்குவதற்கு முன்பே அதனை ஆற்றுப்படுத்த வேண்டியிருக்கிறது. அதற்கு ஒரு சிறிய முயற்சி எடுக்க வேண்டியுள்ளது. எனக்குப் பசிக்கிறது என்று குரலெடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் உண்டாகிறது. பிறகு உணவு கிடைக்கிறது, பசி அடங்குகிறது. இது, கணினியைக் காசு கொடுத்து வாங்கிய பிறகு செயலிகளைத் தனியே வாங்கி நிறுவுவது போல. கணினி வாங்கிவிட்டதனாலேயே எல்லாம் தன்னியல்பில் நடந்துவிடாது. ஒவ்வொரு பணிக்கு ஒவ்வொரு செயலி. ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை. தேவையறிந்து தேடிச் சேர்ப்பது நமது பணி.

மனிதப் பிறப்புக்கு மட்டுமல்ல; பிறப்பு என்ற ஒன்று அமைகிற அனைத்து உயிர்களுக்கும் இது பொதுவானது. சுவாசம், திறமூலம். உணவு பெய்ட் சாஃப்ட்வேர். உலகப் பொதுவானவை பல இருக்கலாம். ஆனால் உயிர்களுக்குப் பொதுவானது இது ஒன்றுதான். இந்த அமைப்பு – இந்தக் கட்டுமானத்தின் அடித்தளத்தை மாற்றி அமைக்கத்தான் சித்தர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • கணபதி சச்சிதானந்தச் சித்தரைப் பற்றிய செய்தி வியப்பின் உச்சம். இதைத் தங்களைத் தவிர்த்து வேறு யார் கூறியிருந்தாலும் நான் நம்பியிருப்பது கடினம்தான். அந்நிகழ்வை, நேரில் பார்த்தப் பேறு தங்களுக்குக் கிடைத்தது தெய்வச்சித்தம்தான். இப்பேர்ப்பட்ட சித்தபுருஷர்கள் நம்மிடையே தோன்றியிருப்பதை என்னும்போதே மயிர்க்கூச்செறிகிறது. “நெருப்பு, நெருப்பை எரிக்காதல்லவா?” என்ற வரியைப் படிக்கையில் மெய்சிலிர்த்து விட்டேன். இயற்கையோடு இயற்கையாதல் என்பதை இதைவிட வேறெப்படி விளக்கிவிடமுடியும்?

    நிற்க.

    “மதங்களும் தத்துவங்களும் மனிதனின் சிந்திக்கும் திறனுக்கு ஓர் எல்லை வகுத்தன. சென்று சேரும் இடம் என்ற ஒன்றைச் சுட்டிக்காட்டிவிட்ட பிறகு, அதற்கு அப்பால் என்று சிந்திக்க முடியாதல்லவா?” — எவ்வளவு உண்மையான வார்த்தைகள்! எவ்வளவு எளிதாகச் சொல்லிவிட்டீர்கள்! அப்படிச் சிந்திக்காமல் கிடந்த ஜீவன்களுள் நானும் ஒருவன். சாத்தானின் கடவுள் இப்போது சிந்திக்கவைத்துவிட்டது.

  • *எண்ணும்போதே*
    பிழைக்கு வருந்துகிறேன்.
    கமெண்டை எடிட் செய்யும் வசதி இருந்தால் நன்றாக இருக்கும்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!