திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து முடித்தவர் ஏ.ஜி.நூரனி. எழுபதுகளில் குஷ்வந்த் சிங், செய்தியாளர் வேலை செய்த பெண் ஒருவரை அறிமுகப்படுத்த நினைத்தாராம். நூரனிக்கும் இந்த யோசனை பிடித்துத்தான் இருந்தது. ஓபராய் ஓட்டல் லாபியில் சந்திக்க முடிவானது. நூரனி சொல்லப்பட்ட நேரத்திற்குச் சரியாகச் சென்றுவிட்டார். அந்தப் பெண்ணோ சில நிமிடங்கள் தாமதமாக வந்தார். அவ்வளவுதான். அந்தக் கதை அதோடு முடிந்து போனது.
உச்சநீதி மன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் ராஜு ராமச்சந்திரன் தனது மதிப்புக்குரிய நூரனிக்கு எழுதிய இரங்கல் கட்டுரையை இப்படித்தான் முடித்திருக்கிறார். நூரனியின் கறார்த்தன்மை பிரபலமானது. அந்தக் குணம்தான், இந்திய அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியிருக்கும் உரிமைகளை உறுதி செய்ய வாழ்நாள் முழுக்க அவரைப் போராட வைத்தது. நூரனியை, ‘செய்தியாளர்களின் செய்தியாளர்’ என்று குறிப்பிடுகிறார் இந்து குழும வெளியீடுகளின் இயக்குநர் என்.ராம்.
மிகச் சிறந்த அரசியல் சட்ட வல்லுநர். வழக்கறிஞர், அரசியல் விமர்சகர். இப்படிப் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர் ஏ.ஜி. நூரனி. அப்துல் காஃபூர் நூரனி என்பது அவரது முழுப்பெயர். காஃபூர் பாய் என அவரது நெருங்கிய நண்பர்களால் அழைக்கப்பட்டவர்.
1930ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி மும்பையில் பிறந்து கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி மும்பையில் காலமானார். அவரது வயது 93.
Wonderful information about Noorani Shaab. thank you, MP & Pandiyarajan sir.