22. பாதையும் பயணமும்
நீங்கள் ஒன்றைக் கவனித்திருக்கலாம். இலங்கையில் எப்போதெல்லாம் தமிழர்கள் மீது சிங்கள அரசு கொடுந்தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடுகிறதோ அப்போதெல்லாம் இங்கே ஒரு விமரிசனம் வரும். பவுத்தத்தைப் பின்பற்றும் நாடும் மக்களும் இவ்வளவு ரத்த வெறி பிடித்து அலைவதைக் கவனியுங்கள் என்பார்கள்.
அல் காயிதா, ஐஎஸ் போன்ற மத்தியக் கிழக்குத் தீவிரவாத இயக்கங்கள் எங்கெல்லாம், எப்போதெல்லாம் குண்டு வைத்துக் கொத்துக் கொத்தாக மக்களைக் கொல்கின்றனவோ அப்போதெல்லாம் இஸ்லாம் ஒரு வன்முறை மதம் என்பார்கள். இஸ்லாமியர்கள் அனைவரையும் இடுப்பில் துப்பாக்கி மறைத்து வைத்தவர்களாகவே பார்க்கத் தோன்றும் விதத்தில் பேசுவார்கள்.
மும்பை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களும் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவமும் கோவை குண்டுவெடிப்பும் அவற்றின் தொடர்ச்சியாகப் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கலவரமும் அமைதியின்மையும் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் விளைவுகளே ஆகும். இந்து மதமும் ஒன்றும் அன்பின் வழியது அல்ல; இந்துக் கடவுளரின் கரங்களில் இருக்கும் ஆயுதங்களே இந்துக்களின் சிந்தனையிலும் செயலிலும் நிறைந்திருக்கின்றன என்று இங்குள்ள மதச்சார்பற்றவர்கள் விமரிசித்தது நினைவிருக்கலாம்.
புத்தர் தோற்கும் இடம் எது என்பதைத் தர்க்கரீதியாக நிறுவி விட்டீர்கள் சார்.
கதைகளுக்குள் கடவுளை ஒளித்து வைத்தவன் நிச்சயம் திறமைசாலிதான்.
புத்தத்தை ஒரு மதமாக மாற்றித் தேக்கிவைத்து விட்டதை உணர முடிகிறது.
மதபோதையை மாய்க்க புத்தர் கொடுத்த போதனைமாத்திரைகள், மதமதுவைக் கொண்டே விழுங்கப்பட்டு விட்டதால், போதை தெளிய, புத்தி தெளிய, வழியே இல்லாமல் போய்விட்டது.