121. ஹோ சி மின் முதல் சே குவாரா வரை
1960களின் ஆரம்பத்தில் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிய ஆப்ரிக்க நாடுகள் ஒரு தளத்தில் ஒன்றிணைந்து 1963ல் ஆப்ரிக்க ஒற்றுமைக்கான அமைப்பினை உருவாக்கின.
அந்த சந்தர்ப்பத்தில் புதிய அமைப்பினை வரவேற்கும் வகையில், “ஆப்ரிக்கா விழித்து எழுந்திருப்பது என்பது இருபதாம் நூற்றாண்டின் உற்சாகம் மிகுந்த ஒரு நிகழ்வு ஆகும். இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. எதிர்வரும் காலத்தில் அது இன்னும் முக்கியமான பங்கினை ஆற்றப் போகிறது. இந்தியா அதனை வரவேற்கிறது” என்று நேரு குறிப்பிட்டார்.
காந்திஜி ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக ஆப்ரிக்காவில் நிலவி வந்த நிற வெறி, ஏகாதிபத்தியம் பற்றி ஆழ்ந்த கவலை கொண்டிருந்தார் நேரு.
1980ல் தென்னாப்பிரிக்கச் சிறையில் இருந்த நெல்சன் மண்டேலா இந்தியப் பிரதமர் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில், “தென்னாப்ரிக்காவின் சுதந்திரப் போராட்டத்தில் காந்திஜி, இந்திய தேசிய காங்கிரஸ், நேரு ஆகியோரது தாக்கம் கணிசமானது” என்று எழுதி இருந்தார்.
டெல்லியில் ஆசியத் தூதரக அமைப்பினை நிறுவ தென்னாப்பிரிக்கத் தேசிய காங்கிரசுக்கு இந்தியா அழைப்பு விடுத்தது மட்டுமில்லாமல் அதற்காக நிதி உதவி செய்யவும், பிற வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் முன் வந்தது.
Add Comment