117 நண்பர்கள்
எதிர்மறை அபிப்ராயங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் எவர் மனமும் புண்பட்டுவிடாமல் எல்லோருடனும் நயமாகப் பழகுபவன் என்பதால் அநேகமாக சுகுமாரனைப் பற்றி எதிர்மறை அபிப்ராயங்களே இருக்க வாய்ப்பில்லை என்பதால் அவனுக்கு எதிர்மறை அபிப்ராயங்களே இல்லை என்கிற மாயத்தோற்றம் நிலவியது.
தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு, இவனுடன் மனுஷன் பழகுவானா என்று, எவனையுமே அருகில் வரவிடாதபடி இருப்பவன் இவன். ஆனால், இவனும் அவனும் நண்பர்கள்.
இதேதான் இவனுக்கும் ஷங்கர் ராமனுக்கும் என்றுகூடச் சொல்லலாம். கடிந்தே பேசத் தெரியாத ஷங்கர் ராமன் உலகத்துக்கே நல்லவன் என்றுதான் உலகமே எண்ணும்படி இருப்பவன்.
ஆனால் சுகுமாரனுக்கும் ஷங்கர் ராமனுக்கும் உள்ளே இருக்கிற ‘வேண்டும் வேண்டாம்கள்’ உறுதியானவை; இவனுடன் ஒப்பிடவே முடியாத அளவுக்கு உறுதியானவை என்றுதான் சொல்லவேண்டும்.
Add Comment