Home » ஒரு  குடும்பக்  கதை – 122
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 122

சீனப் போர்: இந்திய ராணுவத்தினருடன் நேரு
நம்பிக்கை துரோகம்
1962 அக்டோபர் 20. இந்தியா-சீன உறவில் அன்று ஒரு கறுப்பு தினம்.  இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உடன் பிறப்பு உறவில் வெளிப்படையாக விரிசல் விழுந்த நாள்.  அரசியல் ரீதியாக நேருவின் ராஜ தந்திரத்துக்கு ஏற்பட்ட தோல்வி.
இந்தியாவும் சீனாவும் சுமார் 3500 கி.மீ. தூரத்துக்கு நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. மங்கோலியா, ருஷ்யாவிற்கு அடுத்து சீனா இந்தியாவுடன் தான் நீண்ட எல்லையைக் கொண்டுள்ளது.
இந்திய சீன எல்லையில் பூடானும் நேபாளமும் வருவதால் இந்திய-சீன எல்லை மூன்று துண்டுகளாக உள்ளது. அக்சய் சீனா எனப்படும் பகுதி இந்திய மேற்கு எல்லைப் பகுதியில்  உள்ள உடன்பாடு எட்டப்படாத பகுதியாகும். இதை இந்தியா காஷ்மீரின் ஒரு பகுதி என்று சொல்கிறது. ஆனால்,  சீனாவோ  இப்பகுதியை தனது சிங்சியான் மாகாணத்தின் ஒரு பகுதி எனக் கூறுகிறது.
1865ல் ஆங்கிலேய நில ஆய்வாளர் ஜான்சன், காஷ்மீர் மகாராஜாவால் அக்சய் சீனப் பகுதியை அளவிட பணிக்கப்பட்டார். அவர் அக்சய் சீன பகுதி காஷ்மீரின் எல்லைக்குள் உள்ளவாறு ஜான்சன் கோடு என்னும் எல்லையை வரையறுத்தார். அதை சீன அரசாங்கம் நிராகரித்தது. அதனால், பிரிட்டிஷ் ஆட்சியின்போது இந்த எல்லைக் கோடுப் பிரச்னை இருந்தது.

Add Comment

Click here to post a comment

இந்த இதழில்