Home » விரும்பிச் சிக்கிய விண்வெளி வில்லியம்ஸ்
விண்வெளி

விரும்பிச் சிக்கிய விண்வெளி வில்லியம்ஸ்

ஒரு பெண் அறுபதாம் பிறந்த நாளைக் கொண்டாடுவதெல்லாம் உலகச் செய்தியாக வரும் வாய்ப்பு உள்ளதா? வந்தது. சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்தில் சிக்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் செப்டெம்பர் 19ஆம் தேதி, தனது அறுபதுக்கு முந்திய ஹாப்பி பர்த் டேயினைக் கொண்டாடி மகிழ்ந்தார். அங்கே ‘சிக்கியிருக்கிறார்’ என்று சொல்வது எந்தளவு பொருத்தமானது என்பதை ஆராய்ந்து விடுவோம்.

ஐஎஸ்எஸ் ஆய்வுக்கூடத்தில் தற்போது குடியிருப்போர் தொகை, பத்தொன்பது. அனைவருமே இரண்டு, மூன்று பேர் கொண்ட சிறுகுழுக்களாக, வெவ்வேறு காலகட்டங்களில் அங்கே போய் சேர்ந்தவர்கள். கடைசியாக சுனிதா வில்லியம்ஸும் அவரது சகா, வில்மாரும் போன பின்னர், இம்மாதம் இன்னும் மூவர் அங்கு சென்றடைந்தனர். ரஷ்யாவிலிருந்து, இரண்டு காஸ்மோனாட்ஸ் மற்றும் ஓர் அமெரிக்க ஆஸ்ட்ரோனாட். ஒவ்வொரு முறையும் போகும் விண்கலம் விண்ணில் மிதக்கும் சர்வதேச நிலையத்தில் போய் ஒட்டிக் கொள்ளும். இக்காலகட்டத்தில் அங்கே ஐந்து விண்ணோடங்கள் ஒட்டியிருக்கின்றன.

ஜூன் 22ம் தேதி புறப்பட்டு, இருபத்து நான்கு மணி நேரத்தில் ஐஎஸ்எஸ்-இனை அடைந்த போயிங் நிறுவனம் தயாரித்த, ஸ்டார்லைனர், சில தொழில்நுட்பப் பிரச்சினைகளை சந்தித்தமையால், சுனிதாவின் குறும்பயணம் நெடும் பயணமாக மாறிவிட்டது. அதாவது எட்டு நாள்களுக்குப் போன பெண்மணி எண்பது நாள் கடந்தும் அங்கேயே இருக்கிறார். ஸ்டார்லைனர் திரும்பி வந்து மெக்சிக்கோவின் பாலைவனமொன்றின் மீது பத்திரமாகத் தரையிறங்கியது. ஆனால் போன மாலுமிகள் திரும்பி வரவில்லை. நாஸா வெளியிட்ட அறிக்கையில், “அவர்கள் வந்திருந்தாலும் எந்த ஆபத்தும் நிகழ்ந்திராது” என்று சொல்கிறார்கள். இதைப் படிக்கும் நமக்கு, கோபம் வருமா வராதா?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்