சமீபத்தில் ஊடகங்களில், பாகிஸ்தான் நாட்டுப் பொருளாதாரத்தையே மாற்றக்கூடிய ஒரு சந்தர்ப்பம் அமைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. அது அவர்களது கடல் பகுதிகளில் அதிக அளவிலான எண்ணெய் வளங்கள் இருக்கலாம் என்கிற அறிவிப்பு. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த ஆய்வின் முடிவில், உலகளவில் நான்காவது பெரிய எண்ணெய் வள இருப்பாக இது இருக்கும் எனச் சொல்லியிருக்கிறார்கள்.
“கிடைப்பது எரிவாயு இருப்பாக இருந்தால், எங்களுடைய திரவ எரிவாயு இறக்குமதியை ஈடுசெய்துவிடலாம். எண்ணெய் கிடைத்தால், அது எங்களின் எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துக்கொள்ள உதவும். எதுவாயினும் இப்போது ஊகத்தின் அடிப்படையிலேயே தான் மனமகிழ்ந்து கொள்ளவேண்டியது இருக்கும்” என்றார், அந்நாட்டின் முன்னாள் பெட்ரோலியத் துறை நிர்வாக அதிகாரி.
இந்தக் கண்டுபிடிப்பினை மேலும் உறுதி செய்யத் தேவையான செயல்முறைகளுக்கு மட்டும் நான்கு முதல் ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவாகலாம். அதுவும் இவற்றை எல்லாம் செய்து முடிப்பதற்கு இன்னும் 4 ஆண்டுகள் ஆகும் எனவும் திட்டமிட்டிருக்கிறார்கள். அப்படியே இந்தப் பணிகளை எல்லாம் மேற்கொண்டு, நினைத்தவாறே எண்ணெய் இருப்பு உறுதியாகிவிட்டால், அப்போது தான் கஜானாவிற்கு உண்மையான ஆபத்து. வளங்களைத் தோண்டி எடுப்பது, சுத்திகரிப்பது, என அடிப்படை கட்டுமானங்களுக்கு மேலும் பல கோடிகளை இரைக்க வேண்டியது இருக்கும். இவை அனைத்திற்கும் இப்போது அந்நாடு தயாராக இருக்கிறதா என்பது தான் பில்லியன் டாலர் கேள்வி.
ஒரு நாட்டிற்கு வளங்கள் கிடைப்பது வரமல்ல; அதைச் சரிவரப் பயன்படுத்தத் தெரித்த அரசாங்கம் அமைவது தான்….
அருமை…