23 தமிழ் போட்ட சோறு
ஆப்பிள் நிறுவனத்தில் வேலை செய்த முத்துவின் நண்பர் எச்டிசி நிறுவனத்திற்குப் பணி மாறிச் சென்றார். தைவானில் இருந்து தொலைபேசி மூலம் ஒருநாள் முத்துவை அழைத்தார் அந்த நண்பர். ஆன்ராய்டு தொழில்நுட்பத்தில் இயங்கும்படி இந்தி மொழிக்கு எழுத்துரு, கீபோர்டு எல்லாமே செய்ய வேண்டும் என்றார்.
“ஆங்கிலம் அல்லாத மொழியைச் செய்வதென்று இறங்கிவிட்டீர்கள். ஏன் இந்தி மட்டும்? தமிழையும் சேர்த்துக் கொள்ளலாம்.” என்றார் முத்து.
“அதெல்லாம் வேண்டாம். இந்தி மட்டும் போதும்” என்றது எச்.டி.சி.
தமிழ் வேண்டாம் என்றதும், முத்துவுக்குக் கோபம் வரத்தான் செய்தது. ஆனால், முடியாதென மறுக்கவில்லை. முத்துவுக்கு எதிலும் முழு மூச்சுடன் இறங்கி வேலை செய்வதுதான் பழக்கம். அரைமனத்தோடு ஒரு வேலையைச் செய்ய மாட்டார். “நான் இந்தியுடன் தமிழையும் சேர்த்தே செய்து தருகிறேன். இந்திக்கு மட்டும் பணம் கொடுங்கள். தமிழைப் பணமின்றிக் கொடுக்கிறேன்.” என்று தெரிவித்தார்.
Add Comment