Home » G இன்றி அமையாது உலகு – 23
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 23

23. வான், வளி, உயிர், இன்னபிற

தேடல், மின்னஞ்சல், வீடியோ சேவை, புவியியல் வரைபடங்கள், செயற்கை நுண்ணறிவு என இணைய நுட்பம் சார்ந்து கூகுளின் வளர்ச்சியை விரிவாகப்பார்த்தோம். இவற்றைத் தாண்டி கூகுள் ஆராய்ச்சி நிறுவனம் இன்னும் பல முக்கியமான ஆராய்ச்சிகளில் இருக்கிறது. அவற்றையும் விரிவாகப்பார்த்துவிடலாம்.

கூகுள் ஆராய்ச்சிச் சாலையில் எந்த ஐடியாவை வேண்டுமானாலும் நீங்கள் வழங்கலாம் என்று அதன் பணியாளர்களுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. அது நிரல் சார்ந்தோ, செயலிகள் சார்ந்தோ, இணையம் சார்ந்ததாகவோ இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. பருவநிலை மாற்றம், அதைச் சரிசெய்யவோ, கட்டுப்பாட்டில் வைக்கவோ உங்களிடம் ஏதேனும் யோசனை இருக்கிறதா? உடனடியாக அதனை உங்கள் பெயரிலேயே பதிவு செய்து வைக்கலாம். கூகுள் அந்த யோசனை உண்மையிலேயே வலுவானதாக இருந்தால், உடனடியாக அந்தப் பணியாளர் தலைமையிலேயே ஆய்வுக்குழு ஒன்றை அமைத்து, ஆய்வுகளைத் தொடங்கவும், ஒருங்கிணைக்கவும் உதவும்.

இப்படி, உலகின் எந்தப் பிரச்சினை, அல்லது ஏற்கெனவே செயலில் ஒரு திட்டத்தை இன்னும் திறம்படச் செயல்படுத்தமுடியும் என்று யாருக்கேனும் தோன்றினால் அதனைப் பதிந்து வைக்க அங்கு எந்தத் தடையும் இல்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்