Home » மனிதப் பசிக்கு யானைப் பொரி
உலகம்

மனிதப் பசிக்கு யானைப் பொரி

பெரும்பாலான தென்னாப்பிரிக்க நாடுகள் மழையை மட்டுமே விவசாயத்திற்கு நம்பியிருப்பன. ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டே வந்த மழை, இந்த ஆண்டு வரவே இல்லை. வரலாறு காணாத வறட்சியை அறிவித்திருக்கின்றன மூன்றில் ஒரு பங்கு தென்னாப்பிரிக்க நாடுகள். இயற்கைக்குத் துரோகம் செய்பவை என்னவோ, நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி கண்ட நாடுகள் தான். ஆனால் விளைவை அனுபவிப்பது ஜிம்பாப்வே போன்ற ஏழை நாடுகள் தான். வருடத்தின் அதிக வெப்பமான மாதமான அக்டோபரை, இனிமேல் தான் அவர்கள் கடக்க வேண்டியுள்ளது.

“பிடித்த உணவை, பிடித்த நேரத்தில் சாப்பிட்ட காலங்களைக் கடந்து, எப்போது உணவு கிடைக்கிறதோ அப்போது சாப்பிடும் பழக்கத்திற்கு இப்போது நாங்கள் மாறி விட்டோம்” என்கிறார் மஹாச்சி. ஜிம்பாப்வேயின் தலைநகர் ஹராரீயின் சந்தைகளுக்கு மக்காச்சோளம், மொச்சை மற்றும் வேர்க்கடலையை உற்பத்தி செய்து விற்று வந்தவர். அவரது நிலத்தின் பாவோபாப் மரங்கள் (பப்பரப்புளிய மரம்) கூட காய்ப்பதில்லை. அறுபதடி உயரத்திற்கு வளரும் இவை, தனது முப்பதடி விட்டமுள்ள நடுமரம் முழுக்கத் தண்ணீரைச் சேமித்துக் கொள்ளக் கூடியது. ஒன்றரை கிலோ எடையுடன் பெரிய இளநீர் அளவுக்குப் பெரிதாக இருக்கும் இதன் பழங்கள். தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள வறட்சி இதன் தண்ணீரையும், பழங்களையும் கூட விட்டுவைக்கவில்லை.

இன்று அரசு அல்லது தனியார் தொண்டு நிறுவனங்களின் இலவச உணவுப் பொட்டலங்களில், பசிபோக்கிக் கொள்கிறது மஹாச்சியின் குடும்பம். கிராம சுகாதாரத் திட்டத்தின் கீழ், வாரம் ஒருமுறை அவரது இரு பெண் குழந்தைகளுக்கும் உணவு வழங்கப்படுகிறது. “எப்போதாவது தான் வீட்டில் கஞ்சி காய்ச்சப்படும் என்பதைப் பெரியவள் புரிந்து கொள்கிறாள். சிறியவளுக்குத் தான், பசி வந்தால் என்ன செய்வதென்றே தெரிவதில்லை” என்கிறார் மஹாச்சி. ஜிம்பாப்வேயின் எழுபது மில்லியன் மக்களின் இன்றைய நிலை இதுதான். பருவநிலை மாற்றம், எல் நினோ என்று பலவிதக் காரணங்களைக் கூறிவிட முடிகிறது. விளைவு ஒன்றுதான். பசி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!