Home » இருளில் வாழ்ந்த தலைமுறை
உலகம்

இருளில் வாழ்ந்த தலைமுறை

எஸ்காம் மின்சக்தி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மைக்கேல் லோமாஸ் பிரிட்டன் நாட்டிலிருந்து போலீஸ் உதவியுடன் ஒரு வழியாகத் தென் ஆப்ரிக்காவிற்கு வந்து சேர்ந்தார். இவரும், இவருடன் 11 எஸ்காம் நிர்வாகிகளும் ஊழல், பணமோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் போன்ற காரணங்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இதில் நான்கு பேரைக் கைது செய்து, விசாரணை செய்துகொண்டிருக்கிறது தென் ஆப்பிரிக்கா அரசு. மின்சாரமில்லா நெருக்கடி நிலையில் இருந்து இந்தாண்டு மின்தடைகளுக்கு முடிவு கட்டி முன்னேற்றம் கண்டுள்ள அரசு வழக்கு விசாரணையிலும் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்ரிக்காவின் அரசு மின் நிறுவனம் எஸ்காம். மொத்த தென் ஆப்பிரிக்காவிற்கு இந்த நிறுவனம் தான் மின்சாரம் தருகிறது. இவர்கள் திவால் ஆகி, இருபத்தாறு பில்லியன் ராண்ட் கடன் பட்டுள்ளனர். மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்குத் தேவையான மின்சக்தியை எஸ்காம் நிறுவனத்தால் தயாரிக்க முடியவில்லை. பதினேழு மின் உற்பத்தி நிலையம் இருந்தும், அவை திறன்படச் செயல்படவில்லை.

நிலக்கரியைப் பயன்படுத்தும் இந்த மின்நிலையங்கள் ஐம்பது வருடங்கள் பழமையானவை. சரியான பராமரிப்பு இல்லாததால், அவை பழுதடைந்து விட்டன. இதற்காக 2015, 2017 ஆண்டுகளில் இரண்டு புதிய மின் நிலையங்கள் மெடுபி, குசேலியில் உருவாக்கப்பட்டன. இருந்தும், எதிர்பார்த்த படி இந்த மின் நிலையங்களால் மின்சாரம் தயாரிக்க முடியவில்லை. இதன் காரணங்களாகச் சொல்லப்படுவை எஸ்காம் நிறுவனத்தில் நடந்துள்ள ஊழல், பண மோசடி, மேல் அதிகாரிகளின் அலட்சியம். அரசாங்கமும் இதற்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!