செயற்கை நுண்ணறிவு மனிதர்களிடையே பிரிவினையை ஆழமாக்கக் கூடும். செயற்கை நுண்ணறிவு எத்தனையோ நல்ல முன்னேற்றங்களை மனித வாழ்வில் கொண்டு வர உள்ளது. அதற்கு மாறாகப் பல பாதகங்களையும் ஏற்படுத்தவல்லது.
இப்போதெல்லாம் எந்தக் கலந்துரையாடல் நடந்தாலும் செயற்கை நுண்ணறிவு எப்படி இதில் பயன்படப்போகிறது என்ற பேச்சைத் தவிர்க்க முடிவதில்லை. சாதக பாதகங்கள் அலசப்படுகின்றன. வெள்ளை மாளிகையின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான அமெரிக்கக் கல்விக் கழகங்களின் கலந்துரையாடல் நடந்தது. கூகிளும் அமேசானும் மைக்ரோசாஃப்டும் இன்னபிற தொழில் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு செயற்கை நுண்ணறிவின் வருங்காலச் செயல்திட்டங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். விளைவு என்னவாக இருக்கும் எனச் சிந்திப்பதும் முக்கியமானது.
என்னதான் மனிதர்கள் அனைவரும் சமம் என்று சொன்னாலும், யார் வல்லவனுக்கு வல்லவன் என்பதில் எப்போதும் அறிந்தோ அறியாமலோ போட்டி இருந்து கொண்டே இருக்கிறது! உலக அளவில் உடல் நலம், கல்வி, பொருளாதாரம் ஆகியன விளிம்புநிலை மனிதர்களுக்குச் சென்று சேர்வதில் சிக்கல் நீடிக்கிறது. இவர்கள், இனம், மொழி, பாலினம் சார்ந்து பலவகையில் பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பலவிதச் சட்டங்களும் கடும் தண்டனைகளும் ஓரளவிற்கு வளர்ந்த நாடுகளில் பாகுபாட்டைக் குறைத்து அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வழிவகுக்கின்றன.
Add Comment