Home » ஒரு குடும்பக் கதை – 123
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 123

மத்தாய்- இந்திரா காந்தி

மத்தாய் ராஜினாமா

இந்தியப் பிரதமரின் மருமகன் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் ஜெயித்து பாராளுமன்ற உறுப்பினராகிவிட்டார். பாராளுமன்றத்தில் அரசுக்கு, குறிப்பாக பிரதமருக்கு தர்மசங்கடம் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.

டால்மியா ஜெயிலுக்குப் போனது. முந்த்ரா ஊழலில் டி.டி.கே. பதவி இழந்தது. இவற்றை அடுத்து, ஃபெரோஸ் காந்தி, அதிகார மையம் போல செயல்பட்ட நேருவின் தனிச்செயலாளராக இருந்த மத்தாயை நோக்கித் தனது கத்தியைத் தீட்டினார்.

1945ல் நேருவுக்கு அறிமுகமான மத்தாய், இருபத்து நான்கு மணி நேரமும் அசராமல் வேலை செய்யும் வேலைப் பிசாசு. நேரு சம்பந்தமான அனைத்து பணிகளையும் அவர்தான் கவனித்து வந்தார். நேருவின் வரவு செலவுக் கணக்குகள் கூட அவரது மேற்பார்வைக்கு உட்பட்டே இருந்தது.

அவரை மீறி ஓர் எறும்பு கூட நேருவை நெருங்கிவிட முடியாது. தீன் மூர்த்தி பவனில் அவர் வைத்ததுதான் சட்டம் என்பது எழுதாத விதியாக இருந்தது. பிரதமரை யார் பார்க்கலாம் என்பதை மட்டுமில்லாமல் பிரதமர் யார், யாரைப் பார்க்கலாம் என்பது கூட மத்தாய்யின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!