Home » G இன்றி அமையாது உலகு – 24
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 24

24. நலம்சார் செயலிகள்

கூகுள் ஹெல்த் (Google Health) எனப்படும் தனிமனித நலம் மற்றும் மருத்துவம் தொடர்பான செயலிகள் பற்றிய ஆய்வுத்துறை கூகுளில் 2008ல் உருவாக்கப்பட்டது. உடல் நலம், ஆரோக்கியம் சார்ந்த தகவல்களை நுட்பம் சார்ந்து மெருகேற்றுவது. அதைப் பொதுச் சமூகத்துக்கு உபயோகமான, நம்பகமான தகவல்களாக மாற்றுவது. ஒட்டு மொத்தமாக அதனை வழங்கும் மைய ஊடகமாகத் தன்னைக் கட்டமைத்துக்கொள்வது என்பனதான் கூகுள் ஹெல்த்தின் ஆரம்பக்கால நோக்கமாக இருந்தது. ஆயினும் மக்களின் மிகக்குறைந்த ஈடுபாடு, வரத்துக் காரணமாக 2012ல் முற்றாக அதன் சேவைகள் நிறுத்தப்பட்டது.

பிறகு நீண்ட ஆராய்ச்சிகள், மேம்படுத்திய நுட்பங்கள், தரவுகளை நம்பகமாகத் தருவது பற்றிய ஆய்வுகளைத் தீவிரமாக மேற்கொண்டது. 2018ல் மீண்டும் தன் மறு வருகையை வெற்றிகரமாக உலகுக்கு அறிவித்தது. Deep Mind Health நிறுவனம் கூகுள் ஹெல்த்தோடு 2018ல் இணைந்தது. அதற்கு முன்பு கூகுளின் செய்யறிவுத்துறை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தது. இந்த இணைப்பிற்குப் பிறகு மருத்துவத்துறையில் மிகக்குறிப்பிடத்தக்க செய்யறிவைக்கொண்டு மேம்படுத்தப்பட்ட மருத்துவ ஆராய்ச்சிகளை முன்னெடுத்தது.

மருத்துவத்துறைக்கு உதவும் கருவிகளை நுட்பங்களைக் கொண்டு மேம்படுத்துதல். நோய் உருவாகும் / பரவும் முறைகளை நுட்ப ரீதியாகக் கண்டு அதனைத் தொகுத்தல். இதன் மூலமாக வரும்முன் காக்கும் திட்டங்களுக்கு உதவுதல் முதலானவற்றில் தனது கவனத்தைக் குவித்தல், போன்ற ஆய்வுகளை முதன்மையானதாக வைத்துக்கொண்டிருந்தது. படிப்படியாகச் செயற்கை நுண்ணறிவு கொண்டு மருத்துவத்துறையை நவீனப்படுத்துவதைத் தலையாய ஆய்வுத் துறைகளில் ஒன்றாக எடுத்துக்கொண்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!