Home » கெஜ்ரிவாலின் ஓபிஎஸ்
இந்தியா

கெஜ்ரிவாலின் ஓபிஎஸ்

அதிஷி மர்லேனா

அதிஷி மர்லேனா. டெல்லியின் புதிய முதல்வர். தான் பதவி விலகுவதாக முடிவு செய்யப்பட்டவுடன் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிஷாவின் பெயரை அடுத்த முதல்வராக முன்மொழிந்தார் அர்விந்த் கெஜ்ரிவால். பாஜகவின் சுஷ்மா சுவராஜ், காங்கிரசின் ஷீலா தீக்ஷித் வரிசையில் டெல்லி முதல்வர் பதவியில் அமரப் போகும் மூன்றாவது பெண். தற்போதைய பெண் மாநில முதல்வர்களின் பட்டியலில் மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜிக்கு அடுத்ததாக இணைகிறார். இருவரும் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மிகக்குறுகிய காலத்தில் இளம் வயதில் உயர்ந்த பதவியைப் பெற்றிருக்கிறார். பாஜகவின் தடைகளை மீறி ஆட்சியை வழி நடத்தும் மிகப்பெரிய பொறுப்பை அவரிடம் ஒப்படைத்திருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. அடுத்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரே முதல்வர் பதவியை ஏற்கப்போவதாக அறிவித்திருக்கிறார் கெஜ்ரிவால். இன்னும் ஆறு மாதங்கள் கூட இல்லை. தேர்தல் அடுத்த பிப்ரவரியில் வந்துவிடும்.

அர்விந்த் கெஜ்ரிவாலும் மனிஷ் சிஷோடியாவும் வழக்குகளில் கைது செய்யப்பட்ட பிறகு கட்சியைத் தொடர்ந்து தொய்வில்லாமல் வழி நடத்தியதில் மிக முக்கிய பங்காற்றினார் அதிஷி. கடந்த பத்தாண்டுகளில் ஆம் ஆத்மி கட்சியில் பல முக்கியப் பொறுப்புகளை கவனித்து வந்திருக்கிறார். அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு கல்வித்துறையில் பல மாற்றங்களை முன்னெடுத்தது நாடு முழுவதும் பாராட்டுகளைப் பெற்றது. இந்தத் திட்டங்களில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்திருக்கிறார் அதிஷி.

அதிஷியின் பெற்றோர் இருவரும் டெல்லிப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள். பெற்றோர் மார்க்சிஸ்ட் புரட்சிகரப் பின்னணியில் வந்தவர்கள். மார்க்ஸ், லெனின் பெயர்களைச் சேர்த்து உருவானதே அதிஷியின் பின்னொட்டுப் பெயர் மர்லேனா. டெல்லியில் புகழ்பெற்ற ஸ்ப்ரிங் டேல்ஸ் பள்ளியில் பயின்றார். செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பாடத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்தார். அதன் பிறகு மத்தியப் பிரதேசத்தில் சமூக செயல்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டார். ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம். நிறுவனங்களில் கல்வி பயின்ற பிரவீன் சிங் என்பவை திருமணம் செய்துகொண்டார். இருவரும் இணைந்து இந்திய கிராமங்களில் சுயமாக நிர்வாகம் செய்யும் திட்டப்பணிகளில் இணைந்து பணியாற்றினர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!