Home » பணம் படைக்கும் கலை – 24
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 24

24. ஒழுங்கற்ற செலவுகள்

நாம் மாதந்தோறும் செய்கிற செலவுகள் பெரும்பாலும் நம்முடைய அந்தந்த மாதச் சம்பளம் அல்லது மற்ற வருவாயிலிருந்து செல்கிறவையாக இருக்கும். அதனால், இதற்கு இவ்வளவுதான் செலவாகும் என்று அவற்றை முன்கூட்டியே ஊகிப்பதும், திட்டமிடுவதும், பெரிய சிக்கலின்றிச் செலவுசெய்வதும் எளிது.

ஆனால், ஆண்டுக்கு ஒருமுறையோ, சில மாதங்களுக்கு ஒருமுறையோ வரும் செலவுகள் அப்படியில்லை. அவை திடீரென்று எதிர்ப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட மாதத்தில் அவற்றைச் செலுத்தவேண்டியிருக்கிறது. ஒப்பீட்டளவில் அவை மாதச் செலவுகளைவிடப் பெரியவையாகவும் உள்ளன. அதனால், அவற்றுக்கு ஒழுங்காகத் திட்டமிடாவிட்டால் நம்முடைய வரவுக்கும் செலவுக்கும் நடுவில் எதிர்பாராத துண்டு விழக்கூடும்.

அதுபோன்ற நேரங்களில் பெரும்பாலானோர் சட்டென்று நெருக்கடி நேரத் தொகையில் கை வைத்துவிடுவார்கள். பிறகு கையில் பணம் கிடைக்கும்போது அதை இட்டு நிரப்பிவிடுவார்கள்.

ஆனால், நிதி ஒழுக்கத்தின்படி பார்த்தால், இது நல்ல பழக்கம் இல்லை. ஏனெனில், இப்படி அடிக்கடி நெருக்கடி நேரத் தொகையில் கை வைப்பதால் நெருக்கடி என்பதன் பொருள் நம் மனத்தில் சற்று மசங்கலாகிவிடும். எல்லாவற்றையும் நெருக்கடியாக நினைக்கப் பழகிவிடுவோம், எதற்கெடுத்தாலும் அதிலிருந்து பணம் எடுக்கத் தொடங்கிவிடுவோம். அதன்பிறகு, வருங்காலத்தில் உண்மையான நெருக்கடி ஏதாவது வரும்போது நம்மிடமிருக்கும் தொகை அதைச் சமாளிக்கப் போதாது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!