Home » லிப்ஸ்டிக் விளைவு
பெண்கள்

லிப்ஸ்டிக் விளைவு

அரசியலில் லிப்ஸ்டிக் விளைவு பணி மாற்றம். பொருளாதாரத்தில் லிப்ஸ்டிக் விளைவுக்கு வேறு பொருள். அறிவியல், வரலாறு என்று எல்லாத் துறைகளிலும் லிப்ஸ்டிக்குக் தனி அத்தியாயங்கள் உள்ளன.

லிப்ஸ்டிக் என்றால் உதட்டின் மீது சாயம் பூசிக்கொள்வது மட்டும் அல்ல. உங்கள் உதடு உங்களுக்குப் பிடித்தது போல இல்லை என்று நினைத்தால், லிப் பென்சில் வைத்து வரைந்து கொள்ளலாம். கோட்டுக்கு உள்ளே கிரையானில் கலர் அடிக்கும் குழந்தை மாதிரி பென்சிலால் வரைந்த உதட்டுக்குள் லிப் பிரைமர், லிப்ஸ்டிக் உள்ளிட்ட பல அடுக்குப் பூச்சுகளைத் தேய்த்தால் போதும். விரும்பியது போல் உதடு தயார். உதடு பளபளக்க லிப் கிளாஸ். மினுமினுக்க லிப் கிளிட்டர். இப்படி, உதட்டுப் பூச்சு எனும் பொதுத் தலைப்பின் கீழ் லிப் கிளாஸ், லிப் ரோல், லிப் ஆயில் என நூறு வகை அயிட்டங்கள் இன்று சந்தையில் கிடக்கின்றன. பெரும்பாலான பெண்களின் கைப்பையில் இதில் ஏதாவது ஒரு அயிட்டம் கட்டாயம் இருக்கும். அட, உதட்டுச்சாயம் பூசவே மாட்டேன் என்பவர்கள் கூட லிப் பாம் வைத்திருப்பார்கள்.

அமெரிக்காவில் 9/11 தாக்குதலுக்குப் பிறகு என்னென்னவோ நடந்தது. அதில் லிப்ஸ்டிக்குகளின் விற்பனை திடீரென உயர்ந்ததும் முக்கியமான ஒன்று. பொருளாதார மந்த நிலையின் போதும், நெருக்கடியான காலங்களிலும் லிப்ஸ்டிக் போன்ற விலை மலிவான அழகு சாதனப் பொருள்கள் அதிக அளவில் விற்பனையாகும். பெரிய அளவில் செலவு செய்ய முடியாத போது, தனக்குப் பிடித்த சிறிய பொருள்களை வாங்குவது மனதைத் திருப்திப் படுத்துகிறது. கையில் பணம் குறைவாக இருந்தாலும் நம்மால் ‘சொகுசாக வாழமுடியும்’ என்னும் உணர்வை அவை ஏற்படுத்துகின்றன. நெருக்கடியான நிலையில் லிப்ஸ்டிக் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இதை லிப்ஸ்டிக் எஃபக்ட் என்பார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!