Home » ஹரிணி அமரசூரிய : இலங்கையின் புதிய புயல்
உலகம்

ஹரிணி அமரசூரிய : இலங்கையின் புதிய புயல்

“பள்ளிக் கூடங்களில் நிகழும் எந்த உற்சவத்துக்கும் இனிமேல் அரசியல்வாதிகளை அதிதியாக அழைக்கக் கூடாது” பதவியேற்ற இரண்டாவது நாளே பட்டையைக் கிளப்பியிருக்கிறார் பேராசிரியை ஹரிணி அமரசூரிய. இவர் இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர். என். பி . பி கட்சியின் அநுர குமார திஸாநாயக்க அதிபராக நியமனம் பெற்றதன் பின்னர், இலங்கையின் நாடாளுமன்றத்தைக் கலைத்து, அடுத்த தேர்தல் வரை அமைத்த தற்காலிக அரசின் தலைவி. படு சுறுசுறுப்பாக, அடுத்தடுத்து அதிரடிகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்.

“முதல்வன் படம் பாக்குற மாதிரியே இருக்குதுடா” என்று புதிய அரசுக்காக மீம் கூட வந்து விட்டது. ஹரிணியின் முதலாவது ஊடக சந்திப்பில் சர்வதேச தொலைக்காட்சி நிருபரொருவரின் கேள்விக்கு அவர் அளித்த பதில் பயங்கர வைரலாகியது. சுள்ளென்று மிக அழகான ஆங்கிலத்தில் கருத்தாகப் பேசியிருந்தார் அம்மணி. யாரிந்தப் பெண் புயல்? பார்த்து விடுவோம்.

ஹரிணி கொழும்பின் மேட்டுக் குடி வர்க்கத்தைச் சேர்ந்தவர். தலைநகரிலேயே கற்று, 1989 இல் பல்கலைக் கழக அனுமதி பெற்றுக் கொண்டார். ஆனால் இலங்கையில் அது பொல்லாத காலம். ‘எண்பத்தொன்பது’ என்றாலே கறுப்பு வருடமாகக் கருதப்படும் அளவுக்கு, நாடு சின்னாபின்னமாகி இருந்தது. பல்கலைக் கழக மாணவர்கள் அதில் விசேட இரைகளாகத் தேடப்பட்டு வந்தனர். ஹரிணி பல்கலைக்கழகம் செல்வது எப்படியோ தடைப்பட்டுப் போனது. எனினும் தனக்கிருந்த வேட்கையினாலும் விடாமுயற்சியினாலும் இந்தியத் தூதரகம் மூலம் புது டெல்லி பல்கலைக்கழகத்தில் கற்பதற்கு முழுப் புலமைப் பரிசில் ஒன்றைப் பெறுகிறார். அன்றைய தேதியில் இது மிகப் பெரும் விடயம். இன்டர்நெட் இல்லாத காலம். பெரிய பின்னணி இல்லாத இளம் பெண். எப்படியெல்லாம் இறங்கித் தேடியிருப்பார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!