நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியவில்லை என்றால் அரசியல்வாதிகள் கையாளும் சில கல்யாணக் குணங்கள் இருக்கின்றன. ஒன்று மதத்தைக் கையில் எடுக்க வேண்டும் இல்லையென்றால் பெண்களுக்கான புதுச் சட்டம் கொண்டுவர வேண்டும். பெரும்பாலும் அது அடக்குமுறைச் சட்டமாகத்தான் இருக்கும்.
இதற்கு எடுத்துக்காட்டாக, ஆப்கானிஸ்தானிலிருந்து ஆரம்பித்துப் பல நாடுகளைப் பட்டியலிடலாம். இப்போது அந்த வரிசையில் ஈராக் தனது பொது நலச் சட்டத்தை மாற்றுவதற்கான ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது.
ஈராக் என்றால் சுன்னி முஸ்லிம்கள், ஷியா முஸ்லிம்கள், குர்து இனத்தவர் மற்றும் ஐந்து சதவீதம் சிறுபான்மையினர் இருக்கிறார்கள். ஈராக்கில்1959 ஆம் ஆண்டு பொது நலச் சட்டத்தைக் கொண்டு வந்தது அப்போதைய அரசு.
ஷரியா சட்டத்திலிருந்து தேவையான சட்டங்களை எடுத்து தனியாகத் தொகுத்தார்கள். அதுவரை பின்பற்றப்பட்ட ஷரியா சட்டம் இனி கிடையாது என்று அறிவித்தார்கள். இன்று வரை ஈராக்கில் உள்ள இஸ்லாமியர்களுக்கு அதாவது ஷியாவோ, சுன்னியோ அனைவருக்கும் ஒரே சட்டம். ஆனால் மற்றவர்கள் அவரவர் மதம் சார்ந்த சட்டங்களைக் கடைப்பிடித்துக் கொள்ளலாம்.
Add Comment