Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 1
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 1

பகுதி 1: சேர்க்கை

1. மிக மெதுவாக, மிகக் கவனமாக…

முதல் இந்திய விடுதலைப் போர் 1857ம் ஆண்டில் நடைபெற்றதாக வரலாற்றாளர்கள் குறிக்கிறார்கள். அங்கிருந்து 1947ம் ஆண்டுக்குத் தாவினால், சுமார் 90 ஆண்டுகள் போராடிப் பெற்ற விடுதலை இது.

உண்மையில், 1857க்கு முன்பாகவே இந்தியாவில் அங்குமிங்கும் பல விடுதலைப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன, வெள்ளையர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போரிட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். அதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் நம்முடைய விடுதலைப் போராட்டத்தின் வயது கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளைத் தொட்டுவிடும்.

இந்த நீண்ட போராட்டத்தின் கடைசிப் பகுதியில், சரியாகச் சொல்வதென்றால், 1915ம் ஆண்டில்தான் மகாத்மா காந்தி இந்தப் போராட்டத்தில் நுழைகிறார், அடுத்த 32 ஆண்டுகள் ஊக்கத்துடன் பாடுபடுகிறார், மக்களை ஒன்றுதிரட்டுகிறார், அரசியல் விடுதலைக்குமட்டுமின்றி, பொருளாதார விடுதலை, ஆன்ம விடுதலைக்கும் முனையவேண்டும் என்கிறார்.

இன்றைக்கு நாம் காந்தியை இந்தியாவின் தேசத்தந்தை என்கிறோம், அவருக்கு முன்பும் பின்பும் எத்தனையோ விடுதலைப் போராளிகள் இருந்திருப்பினும், மிகப் பெரிய பங்களிப்புகளைச் செய்திருப்பினும், அவரைத்தான் ‘நமக்கு விடுதலை வாங்கிக்கொடுத்தவர்’ என்று புகழ்கிறோம். இந்தப் பொதுமைப்படுத்தலைக் காந்தியே ஒப்புக்கொள்ளமாட்டார் என்கிற உண்மை ஒருபுறமிருக்க, ஊர் கூடித் தேரிழுத்ததுபோன்ற இத்தனைப் பெரிய போராட்டத்தின் மகுடம் இயல்பாக ஒருவருடைய தலையில் வந்து உட்கார்ந்தது ஏன் என்று யோசித்தால் வியப்பாகத்தான் இருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • நல்ல தொடக்கம் சார்.
    தொடர் முழுவதும் தொடர்ந்துவர ஆவலாக உள்ளேன். 🙂 🙏

  • Read the article M K Gandhi, will continue regularly. A Royal Salute to you Chokkan Ji and the Madras Paper Team in particular to Aasaan Pa Ra. From today onwards follow both the articles of you and Pa Ra sir continuously. Thanks a lot for both of you.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!