Home » சலம் – 1
சலம் நாள்தோறும்

சலம் – 1

1. கருவி

சலங்களின் நடுவே அமிர்தம் உண்டு. சலங்களில் சிகிச்சை உண்டு. – அதர்வ வேதம்

 

ஒளி நிறைந்து படர்ந்திருந்தது. கண்ணுக்குப் புலப்படாத தொலைதூரச் சுரங்கங்களில் இருந்து அதனை இழுத்து வரும் நதியே வானை நோக்கி வெளிச்சத்தை வீசியெறிந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. இருளையும் ஒளியையும் காற்றையும் கனலையும் வளப்பத்தையும் வறுமையையும் நதியேதான் தருகிறது என்பதில் எனக்கு என்றுமே ஐயம் இருந்ததில்லை. அது ஒரு பிழைபட்ட கருத்தென்று பலர் சொல்லிவிட்டார்கள். ஆனால் எனக்கு அதைத்தான் நம்பத் தோன்றியது. நானும் என் இனத்தாரும் அப்படித்தான் இருப்போம், தலைகீழாக மட்டுமே சிந்திப்போம், அது பிறப்பின் குறைபாடு என்று எத்தனையோ முறை பிராமணர்கள் கோரை கிள்ளிப் போட்டு வெறுப்புடன் கூறிச் சென்றிருக்கிறார்கள். சிரித்துக்கொள்வேன்.

யாரிடம் போய் முறையிட்டுக்கொண்டிருக்க முடியும்? சஞ்சர யோனிப் பிறப்பின் நினைவு எனக்கில்லை. அண்டஜோத்பிஜத்தில் நானொரு தவளையாகப் பிறந்தேன். ஜராயுஜோத்பிஜத்தில் ஒரு முதலையாக நூற்றெண்பத்திரண்ட வருடங்கள் வாழ்ந்தேன். உத்பிஜத்தில் நாணலாகவும், ஸ்வேதஜத்தில் புழுவாகவும் அண்டஜத்தில் பருந்தாகவும் ஜராயுஜப் பிறப்பில் இந்தக் கதையை உங்களுக்குச் சொல்கிற சாரசஞ்சாரனாகவும் என் கணக்கு எழுதப்பட்டிருக்கிறது. இதே பிறப்பில் ஒரு பிராமணனைக் கொன்று பெறவிருக்கும் பாவத்தையும் சேர்த்துச் சுமக்க விதிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் இது இவ்வளவுதான். இன்னொரு பிறப்பு எனக்கு இல்லை என்பது தீர்மானமாகத் தெரிந்துவிட்டது.

இளன் சொன்னான், ‘அதனாலென்ன? மன்வந்திர காலம் முழுதும் பிசாசாக அலைந்துகொண்டிருப்பாய்.’

‘வாய்ப்பில்லை நண்பனே. நான் பிசாசாகப் பிறப்பெடுப்பேனானால் எழுபிறப்பென்னும் விதியைத் தகர்த்தவனாவேன். எட்டாவதாக ஒரு பிறப்புக்கு வாய்ப்புண்டா என்று சந்தித்த கணத்தில் அந்த பிராமணனை நான் கேட்பேன். அவன் நேரடி விடைகளுக்குப் பிரசித்தி பெற்றவன். கேட்பவனைக் கருதாமல் பதில் தருபவன். மாற்றிப் பேச மாட்டான். சத்தியத்தை அவன் எனக்குத் தெரிவிப்பான்.’

‘ஆனால் கவனமாக இரு. அவன் ஒரு பிராமணன்.’

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!