2. பாதம் தொட்டவன்
அவன் தன்னை துவன்யன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். ஏழு-ஏழரை அடி உயரமும் மணலின் நிறமும் கட்டுறுதி மிக்க உடலும் கொண்டவனாக இருந்தான். கண்ணுக்குக் கண் பார்த்தபோது மரியாதையுடன் புன்னகை செய்தான்.
‘அந்நியனே, நீ யாராக வேண்டுமானாலும் இரு. ஆனால் இப்படி நீருக்கடியில் அமர்ந்துகொண்டு காலைப் பிடித்து இழுப்பது நியாயமல்ல. ஒரு கணம் முதலை என்று நினைத்து, வாயைப் பிளந்துவிடத்தான் ஆவேசமாகக் குனிந்தேன். முகத்தைக் காட்டியதால் பிழைத்தாய்’ என்று சொன்னேன்.
அவன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டான். பிறகு தன்னால் நீரிலிருந்து வெளியே வர முடியாது என்று சொன்னான்.
‘ஏன்?’
‘அது ஒரு சாபம். என்னால் விவரம் சொல்ல இயலாது.’
‘சொன்னால் என்ன ஆகும்?’
‘நானொரு கந்தர்வன். எனக்கு மரணம் என்ற ஒன்று இல்லை. ஆனால் சாபத்தின் பின்னணியை யாருக்காவது சொன்னால் பாறைக்குள் தேரையாகிவிடுவேன். அதன்பிறகு விமோசனமற்றுப் போய்விடும்.’
சலம் வேகமெடுத்து ஓடத் தொடங்கிவிட்டது 🙂
நமக்கு மட்டுமான உண்மைகளுக்கு ஒரு அழகு..ஓய்ந்தபொழுது எடுத்து ரசித்து மீண்டும் அங்கேயே வைத்து விடலாம். எப்பிடிப்பட்ட வரிகள்
இன்றுதான் படிக்கத் தொடங்கினேன்.வித்தியாசமான தொடக்கம். எதோ மாய உலகில் நுழைத உணர்வு. என் பயணமும் தொடங்கியது.