Home » சலம் – 3
சலம் நாள்தோறும்

சலம் – 3

3. தேவி

நண்பகல் வரை நிற்காமல் நடந்துகொண்டிருந்தேன். வழியில் சில காட்டுக்குடிகளைக் கடக்கவேண்டியிருந்தபோது, தென்பட்ட மூப்பர்களிடம் சந்தேகம் எழாதவண்ணம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன். அவன் பெயரைக்கூட யாரும் அறிந்திருக்கவில்லை. அதுவல்ல விஷயம். ஒரு பிராமணனைக் குறித்து நான் விசாரிப்பதையே அவர்கள் யாராலும் நம்ப முடியவில்லை. நான் எங்கிருந்து வருகிறேன் என்று கேட்டுத் தெரிந்துகொண்ட ஒருவர், ‘மூடனா நீ? உனக்கு வேறு பிழைப்பில்லையா?’ என்று கேட்டார்.

‘என்னை மன்னியுங்கள். ஒரு முக்கியமான செய்தியை அவனுக்கு நான் தெரிவித்தாக வேண்டும். அவனது தந்தை சாகக் கிடக்கிறார். தனது மரணத்துக்கு முன்பு மகனைச் சந்திக்க விரும்புகிறார்’ என்று சொன்னேன்.

‘அதை நீ ஏன் சொல்ல வேண்டும்? அவர்கள் குலமே அழிந்துவிட்டதா? சாகக் கிடப்பவன் இறுதி நபரா?’

‘நியாயமாகத்தான் கேட்கிறீர்கள். என் குடும்பத்துக்கு அந்த மனிதர் சிறிது உதவியிருக்கிறார். அந்த நன்றிக்கடன் என்று இதனைச் சொல்வேன்.’

இப்போது அந்த மூப்பன் என்னை வினோதமாகப் பார்த்தான்.

‘இதை நான் நம்ப வேண்டுமா? நீ அவனுக்குத் தஸ்யு. மிருகங்களை உனக்கு மேலாக வைப்பான். நீ தொட்ட புரவியின்மீது அவன் ஏற வேண்டி வருமானால் அதன் முதுகு ரோமங்களைச் சிரைத்து, நதியில் முக்கியெடுத்துத் தீட்டுக் கழிப்பான். ஒரு மூட பிராமணன்கூட உனக்கும் எனக்கும் உதவ மாட்டான். வேறு ஏதாவது சொல்.’

நான் புன்னகை செய்தேன். ‘ராஜநாகம் ஒன்று அவனது தந்தையை விழுங்கப் பார்த்தபோது என் தகப்பன் அவரைக் காப்பாற்றினான். மரணத்தின் நெடியை உணர முடிந்துவிட்ட தருணத்தில் என் தந்தையை அவர் தஸ்யுவெனக் கருதவில்லை. அநேகமாகக் கடவுளாக நினைத்திருப்பார். அதன் தொடர்ச்சிதான் மற்றவை’ என்று சொன்னேன். சாரசஞ்சாரப் பணியில் நான் கற்றதெல்லாம், கணப் பொழுதும் சிந்திக்காமல் அழகிய கதைகளை உதட்டளவிலேயே உருவாக்கிச் சொல்லும் கலையைத்தான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!