5. கூச்சம் கூடாது
1901ம் ஆண்டுக் காங்கிரஸ் மாநாடு வங்காளத்திலுள்ள கொல்கத்தா நகரில் நடைபெற்றது. மும்பையைச் சேர்ந்த வணிகரும் அரசியல் தலைவருமான சர் தின்ஷா எடுல்ஜி வாச்சா இதற்குத் தலைமை வகித்தார்.
அப்போது காந்தி இந்தியாவுக்கு வந்திருந்தார், அதனால், இந்த மாநாட்டில் கலந்துகொண்டார். அவருடைய முதல் காங்கிரஸ் அனுபவம் இதுதான்.
காந்தி காங்கிரஸ் மாநாட்டுக்கு வெறும் பார்வையாளராக வரவில்லை, தென்னாப்பிரிக்காவைப்பற்றிய தீர்மானம் ஒன்றை முன்வைத்துப் பேசுவதற்காகவும் வந்திருந்தார். அதனால், அவருக்குள் ஒரே பதற்றம்.
சிறுவயதிலிருந்தே காந்திக்கு மேடைப் பேச்சு என்றால் நடுக்கம்தான். தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றபிறகு அந்த அச்சம் சற்றுக் குறைந்திருந்தது, மேடைகளில் இயல்பாகப் பேசும் திறனை வளர்த்துக்கொண்டிருந்தார். ஆனால் இப்போது, அந்தத் திறமையெல்லாம் மறந்துபோய்விட்டாற்போலிருந்தது, உள்ளுக்குள் பழையபடி நடுங்கத் தொடங்கியிருந்தார்.
Add Comment