Home » ஆர்டிக்கில் சீனாவின் நாட்டியத் திருவிழா
உலகம்

ஆர்டிக்கில் சீனாவின் நாட்டியத் திருவிழா

ஆர்டிக் கடல் பிரதேசத்தில் அலாஸ்காவிற்கு வடக்கே, பெரிங் கடல்( Bering Sea) பகுதியில் சீனாவின் இரண்டு சின்ன கப்பல்களையும் ஏவுகணைகளைச் செலுத்தக்கூடிய க்ரூசைரையும் ( missile cruiser) பார்த்துத் திகைத்துப் போய் இருக்கிறது அமெரிக்கா.

நமக்கு பிடிக்காத யாரோ ஒருவர் நாம் வாழும் தெருவின் கோடியில் ஒரு வீடு வாங்கி வந்துவிட்டால் எல்லாரும் இயல்பாக எடுத்துக்கொள்வதில்லை. அப்படித்தான் அமெரிக்காவும் இதைப் பார்க்கிறது. சீனக் கப்பல்களுடன் ரஷ்யாவின் கப்பல்களும் சேர்ந்து வேடிக்கை காட்டி பிரிந்து போய்விட்டன.

1971 இல் அப்படித்தான், அமெரிக்கக் கடற்படை இந்து மகாக் கடலில் இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் வந்தது. அமெரிக்க அதிபர் நிக்ஸன் செய்த மிக மோசமான அரசியல் முடிவு அது. அப்போது பாகிஸ்தான் இந்தியாவின் வட எல்லையில் வான்வெளித்தாக்குதல் நடத்த, அப்போதைய பிரதமர் இந்திரா, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன் பின் நடந்தது வேறொரு வரலாறு!

சீனாவின் கப்பல்கள் எந்தச் சட்டத்தையும் மீறவில்லை, அல்லது எந்த விதிமுறையையும் தகர்த்தெறியவில்லை. ஆனால், ஆர்க்ட்டிக் கடல் எல்லையில் அவற்றைக் காணமுடிவதே அமெரிக்காவிற்குப் பற்களில் மாட்டிக்கொண்ட இறைச்சி துண்டுகள் போலக் கவலை அளித்திருக்கிறது!.

பல வருடங்களாகவே சீனா, இந்தப் பகுதியில் தன் காலடித்தடங்களைப் பதிக்க முயன்று வந்திருக்கிறது. அங்கே இருக்கும் தாதுக்கள், அலாஸ்காவின் கடல் வழி வர்த்தகத் தடங்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு காத்திருந்தது. இது ஓர் அரசியல் தந்திரமும் கூட. நாடுகளின் எல்லைச் சுதந்திரத்தின் பாதுகாப்புக்கும் அச்சத்தை விளைவிக்கும் சூழலாகக் கூட அமையும். அலாஸ்கா, அமெரிக்கா, வட அமெரிக்க எல்லைப் பகுதிகள் இனி விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!