26. கல்விக்களம்
மற்ற எல்லாத் துறைகளையும் போலவே கல்விக்களத்திலும் கூகுள் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இன்றைய நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்றவாறு புதுமைகளைப் புகுத்தி, கல்வியை எளிமையும், நுண்மையும் கொண்டு மேம்படுத்துவதற்கான எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறது.
கூகுள் வகுப்பறை (Google Classroom)
கூகுள் க்ளாஸ்ரூம் என்பது ஓர் இலவச இணையச் செயலி. இதனை மாணாக்கர்களும், ஆசிரியர்களும் ஒரு குழுவாகப் பயன்படுத்த முடியும். இந்தச் செயலியில் இணைந்து கொண்டு, பள்ளிப்பாடங்களின் டிஜிடல் வடிவங்களைப் பகிர முடியும். வீட்டுப்பாடங்களை மாணவ / மாணவிகளுக்கு அனுப்பி, அவர்கள் அதனைச் செய்த பின்பு டிஜிடலேற்றம் செய்து, ஆசிரியர்கள் திருத்தி, நிரந்தரக் கோப்புகளாக இணையத்திலேயே வேண்டும்போது பார்த்துப் பரிசீலிக்கும் வண்ணம் அமைத்துக்கொள்ளலாம். ஏற்கனவே பல பள்ளிகளில் மிகவும் பயனுள்ள செயலியாகக் கூகுள் வகுப்பறை உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.
போலவே கூகுள் டிரைவ் (Drive) , கூகுள் டாக்ஸ் (Docs) முதலான இணைப்புச்செயலிகளையும் இத்துடனேயே இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்பதால், கூகுள் வகுப்பறை ஒரு நேர்த்தியான செயலியாகவே கருதப்பட்டு, பயன்படுத்தப்பட்டும் வருகிறது.
Add Comment