டெல்லியில் தொடர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சோனம் வாங்சுக் அறிவித்திருக்கிறார். ‘ஜனாதிபதி, பிரதம மந்திரி, உள்துறை அமைச்சர் மூவரில் யாரையாவது சந்திக்க வேண்டும். எங்கள் தேவைகளைப் பற்றி விவாதிக்க வேண்டும். நேரம் ஒதுக்குங்கள்.’ என்கிறார்.
சோனம் வாங்சுக் என்ற பெயர் பலருக்கும் பரிச்சயமாகாமல் இருக்கலாம். ஆனால் நண்பன் திரைப்படம் தெரியும் தானே? அதில் வரும் கொசக்சி பசப்புகழ் கதாபாத்திரம் இவரை மனத்தில் வைத்து உருவாக்கப்பட்டது தான். ஆம். சோனம் வாங்சுக் தான் நிஜவாழ்வின் கொசக்சி பசப்புகழ்.
கல்வி, காலநிலை மாற்றங்கள், அரசியல் என ஏதாவது ஒன்றில் இன்றியமையாத பணியைச் செய்வதே பெருங்காரியம் என்னும்போது, மூன்று தளங்களிலும் லடாக் மக்களுக்கு அவசியமான பணிகளைச் செய்துவருகிறார் வாங்சுக். கல்வியாளர், கண்டுபிடிப்பாளர், பொறியாளர், சமூக ஆர்வலர் என அவரின் டேக் லைன் சற்றே நீண்டது. அறிவை ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகளுக்கு நேரடி உதாரணம் இவர்.
Add Comment