Home » சத்தம் போடாதே! – இது சைலண்ட் லே-ஆஃப் காலம்
தொழில்

சத்தம் போடாதே! – இது சைலண்ட் லே-ஆஃப் காலம்

‘அலுவலக்திற்கு வர வேண்டுமாம். அதுவும் வாரத்தில் ஐந்து நாள்களுக்கு. அநியாயம்.’ அமேசான் பணியாளர்களின் ஒருமித்த குமுறல் இதுதான். சென்ற வாரம் அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஆன்டி ஜெஸ்ஸி தனது அலுவலகச் சொந்தங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த நீண்ட நெடும் கடிதத்தின் சாரம் இதுதான். வரும் பொங்கலுக்குள், அதாவது ஜனவரி 2025 பொதுவில் அனைவரும் ஐந்து நாள் அலுவலகப் பணிக்குத் திரும்ப வேண்டும்.

இது வரை வாரத்தில் மூன்று நாள்கள் என நீங்கள் ஆபீசுக்கு வந்து வேலைபார்த்தது, உங்களுக்குப் பணி சார்ந்து எத்தனை உற்சாகத்தை, மன நிறைவை, உந்துதலைக் கொடுத்திருக்கும் என எண்ணிப் பாருங்கள் நண்பர்களே. அதையே முன்பு போல ஐந்து நாள்களாக மாற்றினால் எப்படி இருக்கும். குழுவில் ஒருவருக்கொருவர் யோசனைகளைப் பரிமாறிக்கொள்வது தொடங்கி, பணித் திட்டங்களை மேற்கேற்றுவது என மீண்டும் ஒன்றுகூடி இயங்குவோம்.

நான் அமேசானில் 27 ஆண்டுகள் அங்கமாக இருப்பேன் என்றெல்லாம் நினைத்ததேயில்லை. ஒன்றிரண்டு வருடங்களில் நியூயார்க் சென்றுவிடலாம் என்பது தான் திட்டம். ஆனால் இந்த நிறுவனத்தின் அசுர வளர்ச்சி, பணிச் சூழல், வாடிக்கையாளருக்குக் கொடுக்கப்படும் முன்னுரிமை என என்னை இங்கிருந்து நகர விடாமல் செய்துவிட்டது. அதை அடித்தளமாக வைத்து அடுத்த கட்ட வளர்ச்சிக்குச் சில திட்டங்களை நானும் நமது சீனியர் குழுவும் ( s டீம்) யோசித்துள்ளோம்.

உலகின் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தை போல நாம் பணியாற்றவேண்டும். அதற்கேற்றவாறு நம் அமைப்புமுறையை சற்றே மாற்றி, இப்போது இருக்கும் மேலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து உங்கள் பணிகளை மேலும் எளிதாக்கவுள்ளோம். (அதாவது ஆறில் ஒரு மேலாளருக்குக் கணக்கு செட்டில் செய்யப்படும்). மற்றபடி அனைத்தும் நலம். அடுத்த கடிதத்தில் சந்திப்போம். இதுதான் கடிதச் சுருக்கம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!