Home » யாரோ
இலக்கியம் கதைகள்

யாரோ

விமலாதித்த மாமல்லன்


கரூர் பக்கத்தில் இருந்த சிறிய கிராமத்திலிருந்து திருச்சி ஆபீஸுக்கு வந்துபோய்க்கொண்டிருந்த முருகேசனுக்கு ஏர்போர்ட் போஸ்டிங் கிடைத்தது. இன்ஸ்பெக்டராக வேலைக்குச் சேர்ந்து பல வருடங்களாகியும் இன்னும் சூப்பிரெண்டண்டண்ட் வரவில்லை என்கிற குறை இருந்தாலும் இதாவது கிடைத்ததே என்று சமாதானப்படுத்திக்கொண்டார். ப்ரொமோஷன் வராத வருத்தத்தை வெளிப்படையாகவே நரஹரியிடம் ஒருமுறை புலம்பாத குறையாகச் சொல்லியிருந்தார்.

‘வாய் கூசாம கோட்டானு சொல்லுவானுங்க. ஜம்ப் பண்ணிப் போறான்னு சொல்லுவானுங்க. ஆனா பாருங்க, இன்ஸ்பெக்டரா சேந்து 18 வருஷம் கிட்ட ஆவுது. எங்க வந்துது சூப்பிரெண்டெண்டண்ட் ப்ரொமோஷன். வேகன்ஸிய ஃபில் பண்ணாம வருஷக் கணக்கா மங்களம் பாடிக்கிட்டுக் இருந்தானுங்க. வி.பி சிங் வந்துதான் விடிவுகாலம் பொறந்துது. நிரப்பாம வெச்சிருந்த பேக்லாக் ரிஸர்வ்டு வேகன்ஸிய நிரப்பறத்துக்காகவே எக்ஸ்க்ளூஸிவா எக்ஸாம் வெச்சாரு. அந்த மனசெல்லாம் எத்தனப்பேருக்கு இருக்கு சொல்லுங்க. அதுலதான் பலபேருக்கு இன்ஸ்பெக்டர் கெடைச்சிது. நியாயப்படி, வர வர ரிஸர்வ்டு வேக்கன்ஸிய இன்குலூட் பண்ணி எக்ஸாம் நடத்திக்கிட்டு இருந்திருந்தா நா எப்பையோ சூப்பிரெண்டண்டண்டாகி இப்ப ஏசிக்கில்ல வெய்ட்பண்னிக்கிட்டு இருக்கணும். இன்னும் சூப்ரெண்ட் ஆகற வழியவே காணம். எனக்கு முன்னாடியே நெறைய பேரு நிக்கிறாங்களே. சீனியாரிடி லிஸ்ட்ட எடுத்துப் பாத்தீங்கனா 91ல வரிஞ்சலா SC கேண்டிடேட்டா இருப்பாங்க. அவங்கல்லாம் எக்ஸ்க்ளூஸிவ் எக்ஸாம்ல வந்தவங்கதான். ஆனா அதனாலயே நெறெய பேருக்கு ப்ரொமோஷன் லேட்டாகும். எல்லாரும் SCங்கறதால ப்ரொமோஷன் பெனிஃபிட் இல்லாம பலபேர் இன்ஸ்பெக்டராவே உக்காந்திருப்பான். கேடர் ரிவ்யூல க்ளியர் ஆனாதான் உண்டு. எவ்வளவு கமுக்கமா வேல செஞ்சி நியாயமா கெடைக்க வேண்டியதைக் காலங்காலமா கெடுத்துக்கிட்டு இருந்திருக்கானுங்க பாருங்க. புத்தி, நம்ப ஊர்ல அடுத்தவனைக் கெடுக்கத்தான் வேலைசெய்யிது’ என்று வறட்சியாகச் சிரித்தார்.

ஆடிட் போகும்போது பாண்டிச்சேரி கம்பெனிக்காரர்கள் அழைத்துச்செல்லும் நட்சத்திர ஓட்டல்களில் நரஹரி அசைவம் உண்பதை முதல்முறை பார்த்தபோது ‘என்னாங்க இது. உங்கள மாதிரி ஆளுங்களாலதான் கறி வெல ஏறுது’ என்று வியந்து கிண்டலடித்துவிட்டு நடராஜன் சூப்பிரெண்டண்டண்ட்டைப் பார்த்தார். அவர் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் உண்டுகொண்டிருந்தார். நரஹரியிடம் அவர் மனம்விட்டுப் பேச, பிராமினாக இருந்தும் அசைவம் உண்கிறான் என்பது மட்டுமின்றி, அவன் பூணூல் அணிவதில்லை என்று அன்பரசன் அவரிடம் சொல்லியிருந்ததும் முக்கியமான காரணமாக இருந்தது. இதை, ‘நீங்க மத்தவங்களைப்போல இல்ல. வேற டைப் ஆளுனு சொல்லியிருக்காரு அன்பு’ என்று முருகேசனே சொல்லியிருந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!