Home » ஹான் காங் : தெளிவுக்கும் பிறழ்வுக்கும் இடையே உள்ள தூரம்
விருது

ஹான் காங் : தெளிவுக்கும் பிறழ்வுக்கும் இடையே உள்ள தூரம்

ஹான் காங்

தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு (Han Kang) இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தென்கொரியாவிலிருந்து இந்த விருதைப் பெறும் முதல் எழுத்தாளர். நோபல் பரிசு பெறும் பதினெட்டாவது பெண் என்ற பெருமைகளையும் சேர்த்தே பெறுகிறார். `வரலாற்றுத் துயரைத் துணிவுடன் எதிர்கொள்ளும் கவித்துவ உரைநடைக்காக இந்தப் பரிசு` என்கிறது நோபல் குழு.

`எழுதும்போது ஒவ்வொரு வார்த்தையும், அதற்குண்டான உணர்வைக் கடத்த வேண்டும். மின்சார வேலியைத் தொட்டால், உடல் என்ன உணருமோ, அதைப் படிக்கும் வார்த்தைகளிலிருந்து வாசகன் உணரவேண்டும். அப்படி வந்தால் எழுதுவேன். இல்லையென்றால் அது வரும்வரை காத்திருப்பேன்`. இது ஹான் காங், தன்னுடைய எழுத்துகள் பற்றிச் சொன்னது.

புக்கர் பரிசு வென்ற அவரது `தி வெஜிடேரியன்` நாவலைப் படித்த எல்லோருமே அந்த மின்சார வேலிப் படிமத்தை நன்கு உணர்ந்திருப்பார்கள். அவலமும், வன்முறையும், அமானுஷ்யமும், மனப்பிறழ்வு கொண்ட ஒரு பெண்ணின் அனுபவங்களும் தோய்ந்தது அந்த நாவலின் மொழி. படிக்கும் ஒவ்வொருவரையும் திடுக்கிட வைத்தது. புதிய உலகிற்குள், புதிய வலிக்குள், புதிய குழப்பங்களுக்குள் சிக்கிக்கொண்ட உணர்வைக் கடத்தியது. உலகெங்கும் தமிழ் உட்பட பதினெட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இன்றும் அதிகம் விரும்பி வாசிக்கப்படும் நாவலாகவும் இருக்கிறது.

ஹான் காங், தென்கொரியாவின் க்வாங்ஜூ நகரில் பிறந்தவர் (Gwangju). இவரின் தந்தையும் ஓர் எழுத்தாளர். சேர்ந்தே இருப்பது புலமையும் வறுமையும் என்று சிவபெருமானே சொல்லியிருக்கிறார் அல்லவா? ஹானின் குடும்பத்திற்கும் அஃதே விதி. பொருள் தேடிப் புலம்பெயர்ந்து பல ஊர்களுக்கும் சென்றிருக்கிறது அக்குடும்பம். செல்லுமிடங்களிலெல்லாம் புதிய மனிதர்களிடம் பழகுவது, ஹானின் இயல்புக்கு அன்னியமாக இருந்திருக்கிறது. அப்படி வீட்டில் புகுந்து கொண்ட தருணங்களுக்கெல்லாம் அவரது தந்தை சேர்த்து வைத்திருந்த புத்தகங்களே துணையும் ஆகியிருக்கிறது. படித்துப் படித்து மொழியின் மீது தணியாத ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். கீழைத் தத்துவத்தை மிக ஆழமாகக் கற்றிருக்கிறார். பள்ளிக் கல்வி முடிந்ததும் பல்கலைக்கழகத்திலும் கொரிய இலக்கியத்தையே விருப்பப் பாடமாகவும் படித்திருக்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!