Home » சலம் – 13
சலம் நாள்தோறும்

சலம் – 13

13. அருளும் பொருளும்

ஹேமந்த ருதுவின் முதல் சுக்ல பட்சம் தொடங்கியிருந்தது. காற்றே உறைந்துவிட்டாற்போல வெளியை துஷாரம் குவிந்து நிறைத்திருந்தது. தருக்களின் இலைகளிலும் கிளைக் கொம்புகளிலும் தடித்த தேகத்திலும்கூட வெண்படலம் மேவியிருந்தது. குருகுலத்தில் இருந்த பதினெட்டு பர்ணசாலைகளின் மேற்கூரைகளும் வெளேரென்று இருந்தன. அவர்கள் புற்களையும் ஓலைகளையும் கொண்டுதான் பர்ணசாலைகளை அமைக்கிறார்கள். மண் சுவர்களும் புல் வேய்ந்த கூரையும் எப்படி சிசிரத்தைத் தடுக்கும்? கதவுகளற்ற பர்ணசாலைகளின் உட்புறமெல்லாமும்கூட துஷாரக் குவியலாகியிருக்கும் என்று என் தகப்பன் சொன்னான்.

நான் சென்று அவற்றை அப்புறப்படுத்தவா என்று கேட்டேன். அவன் சிறிது யோசித்துவிட்டு, ‘உத்தரவில்லை மகனே. எனவே வேண்டாம்’ என்று சொல்லிவிட்டான்.

ஒப்பிட்டால் நாங்கள் குடியிருந்த குடிசை சற்றுப் பாதுகாப்பானது. அதுவும் ஓலைக் குடிசைதான் என்றாலும் என் தகப்பன் அதன் உட்புறம் முழுதும் காட்டெருமைகளின் தோலை வேய்ந்திருந்தான். தரையிலும் காய்ந்த கோரைப் புற்களைக் கட்டுக்கட்டாக அடுக்கி, அதன்மீது கம்பளி விரித்து வைத்திருப்போம். சந்தியில் என் தாய் குங்கிலியத்தைத் தீயிலிட்டு வைத்துவிடுவாள். குடிசையெங்கும் மிதமான சூடும் மணமும் நிறைந்திருக்கும்.

‘இந்த பர்ணசாலைவாசிகள் பாவம் அப்பா. ஒவ்வொரு பனிக்காலத்திலும் வேறெங்காவது போய்விடுவார்களோ?’

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!