Home » வழிகாட்டு; பின்தொடராதே!
ஆளுமை

வழிகாட்டு; பின்தொடராதே!

தொழிலதிபர் ரத்தன் டாடா இறந்து போன செய்தி பெரும்பான்மை இந்திய மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. வழக்கமாக ஒரு நிறுவனத்தைச் சார்ந்த பெரிய தலைவர் இறந்தால் அந்நிறுவனத்தின் பங்குகள் விலை வீழ்ச்சியடையும். ஆனால் டாடா நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தன. டாடா இறந்த பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் பலர் டாடா நிறுவனப் பங்குகளை வாங்கினர். டாடா கெமிக்கல், டாடா டெலிகாம் பங்குகள் பத்து சதவிகிதம் வரை ஏற்றம் பெற்றன.

டாடாவின் இளம் நண்பர் சாந்தனுவின் “குட்பாய் மை டியர் லைட்அவுஸ்” பதிவும், பிரபலங்கள் பதிவுகளும் மட்டுமின்றி பொதுமக்கள் பலரும் டாடா உடன் தங்களுக்கிருந்த அறிமுகத்தைக் குறிப்பிட்டுப் பதிவுகள் எழுதினர். அதில் பலரும் சாமானிய மக்கள்.

அரசாங்கத்தின் சம்பிரதாயமான இரங்கல் நடவடிக்கைகளைத் தாண்டி இத்தகைய செயல்கள் ரத்தன் டாடாவின் மீது மக்கள் கொண்டிருக்கும் அன்பைத் தெரிவிக்கின்றன.

வயது மூப்பினால் உண்டான உடல் நலக் குறைவால் 86 வயதில் டாடா உயிரிழந்தார். இறந்த பிறகு உடலை அவர்கள் வழக்கப்படி வான் அடக்கம் செய்யாமல் எரியூட்டுவதைப் பெரும்பாலான இந்திய பார்சிகள் பின்பற்றுகின்றனர். பார்சி இனத்தவரான ரத்தன் டாடாவின் உடல் தெற்கு மும்பையில் உள்ள மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது. மகாராஷ்டிர அரசு அவருடைய இறுதிச் சடங்குகளை அரசாங்க மரியாதையுடன் நடத்தியது. இந்து, சீக்கிய, முஸ்லிம், கிறித்துவ மதப் பிரார்த்தனைகளும் நடைபெற்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!