Home » கடலில் மூழ்கிக் காசு எடுக்கும் கன்னிகள்
உலகம்

கடலில் மூழ்கிக் காசு எடுக்கும் கன்னிகள்

‘ஜெஜு தீவு’ உலகம் சுற்றும் வாலிபர்களின் பக்கட் லிஸ்டில் கண்டிப்பாக இடம்பெறும் ஓரிடம். சொர்க்கபுரி போன்ற அதன் காலநிலையும், எரிமலைகள் , நீர்வீழ்ச்சிகளும், ஏகப்பட்ட உயிரிகளும், நீந்தித் திரியும் ‘ கடல் பெண்களும்’ தீவின் முக்கிய அம்சங்கள். கொஞ்சம் பொறுங்கள். கடல் கன்னிகள் தெரியும். அதென்ன கடல் பெண்கள்? கொரிய மொழியில் ‘ஹென்யோ’ என்றழைக்கப்படும் இவர்கள் சூப்பர் ஹீரோ போன்றவர்கள்.

தென்கொரியாவுக்குத் தெற்கே, தனித்து நிற்கிறது இந்த இரண்டாயிரம் சதுர கி.மீ நிலத்துண்டு ஜேஜு. அங்கே சுமார் மூவாயிரம் ஹென்யோவினர் தற்போது வாழ்கின்றனர். சுற்றிவரக் கொட்டிக் கிடக்கும் சமுத்திரத்தில் மூழ்கி, உணவை அறுவடை செய்து வரும் இவர்களைப் பார்க்கவென்ற ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கே போகிறார்கள். பிராணவாயுவோ, விஷேட உபகரணங்களோ இன்றி, அப்படியே கடலுக்குள் குதிக்கிறார்கள். இருபது கி.மீ வரை உள்ளே நீந்திச் சென்று, கையில் கொண்டு போகும் சிறு கத்தியால் கடற்படுகையைத் தொடுகிறார்கள். அங்கே ஒட்டியிருக்கும் கடல் நத்தைகள், கடற்பாசிகள், ஆக்டோபஸ் என விதம் விதமான சிறுவிலங்குகளை அள்ளி, தமது கூடையில் நிரப்பிக் கொண்டு மேல் மட்டத்துக்கு வருகிறார்கள். இதற்கு சுமார் ஏழு மணித்தியாலங்கள் போகலாம். ஒரு தடவைக்குக் கிட்டத்தட்ட மூன்று நிமிடம் மூச்சைக் கட்டுப்படுத்திக் கொள்வார்கள். இதுவல்லவோ சூப்பர் பவர். (நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களின் மூச்சைக் கட்டுப்படுத்தும் அளவு முப்பது நொடிகள்)

இங்கே உடல் பலத்தை விட மனபலம்தான் அதீதமாகத் தெரிகிறது. அவர்களைப் பொறுத்தளவில், கடல், காசு பொறுக்கும் இடம். ஒரு வர்த்தக மூலதனம். வாழ்வாதாரம். அதற்குள் நுழைந்தால் மட்டுமே வீடுகளில் உணவு பரிமாறப்படும். அதனால் எதனைப் பற்றியும் யோசிப்பதில்லை. சுவாசிப்பது உட்பட. கால்களில் சிறு செட்டை போன்ற ஏதோ ஒன்றை மாட்டிக் கொண்டு, கண்களுக்கு மட்டும் பாதுகாப்புக் கண்ணாடி அணிந்தால், பயணத்துக்குத் தயார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!