Home » சலம் – 16
சலம் நாள்தோறும்

சலம் – 16

16. சாபம்

கிராத குலத்துச் சாரன் ஒருவனின் மனத்துக்குள் புகுந்து தன்னுடைய சரிதத்தைத் தானே எழுதிக்கொள்ள அந்தச் சூத்திர முனியால் எப்படி முடிந்ததென்று உங்களுக்குத் தெரியுமா? இது கலையல்ல. மாயமந்திரமல்ல. அற்புதமோ அதிசயமோ அல்ல. இது ஒரு விஞ்ஞானம். எதுவும் ஒன்றென உணர்ந்தவர்களுக்குப் புரியும். அனைத்துலகங்களையும் உள்ளடக்கிய பிரபஞ்சம் ஒன்று. அத்தனை பிரபஞ்சங்களையும் சேர்த்திணைக்கும் வெளி ஒன்று. வெளியெலாம் நிறைந்த ஒலி ஒன்று. ஒளியும் உணர்வும் ஒன்று. இருப்பும் இறப்பும் ஒன்று. மனம் ஒன்று. ஆன்மா ஒன்று. அனைத்தும் ஒடுங்கும் பிரம்மம் ஒன்று.

இதில் அவன் மனம் இவன் மனம் என்ற இருமை இருக்க முடியுமா. காலத்தின் முடிவற்ற பெருவெளியில் சாரசஞ்சாரன் எழுதிக்கொண்டிருக்கும் வரிகளின் இடையில் குத்சன் தன்னுடைய சரிதத்தைச் சொருகி வைக்கிறான். அவனுக்கு அது அவசியம். புறக்கணிப்பின் ஆறாத ரணமென்னும் நியாயம் அவன் பக்கத்தில் இருக்கிறது. ஒன்றுமே சொல்ல இயலாது. அவனை நிற்க வைத்துக் கேள்வியெழுப்பும் அதிகாரம், பிறப்புள்ள யாருக்குமில்லை. எனக்கு நன்றாகத் தெரியும். அவன் தேவர்களால் பழிவாங்கப்பட்டவன். இந்திரனால் வஞ்சிக்கப்பட்டவன். ரிஷிகளால் ஏமாற்றப்பட்டவன். பிராமணர்களால் அவமானப்படுத்தப்பட்டவன். காயங்களைக் காலம் ஆற்றும். ஆனால் நினைவில் சேமித்த வலி பிரளயக் கட்டம் வரை மீதமிருக்கும். அது எப்போதும் மீதமிருப்பதுடன் கலந்துவிட வேண்டுமென்பது அவனது இச்சை.

ஆனால் மீதமெனும் பிரம்மத்துக்கு உணர்வில்லை. பிரம்மத்தில் வலி கலந்தால் அதற்கு வலிக்காது. பிரம்மத்துடன் கலப்பதனாலேயே மானுட வலிகள் பிரம்மமாகிவிடப் போவதுமில்லை. அனைத்துமறிந்த சூத்திர முனி இதை எப்படிச் சிந்திக்க மறந்தானென்று தெரியவில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!