Home » உரு – 28
உரு தொடரும்

உரு – 28

முத்து நெடுமாறன்

28 அமைதியோ அமைதி

கணித்தமிழ் ஆர்வலர்கள் பலரும் முத்து கார் வாங்கப் போன கதையை அவ்வப்போது சிலர் மேற்கோள் காட்டிப் பேசுவதைக் கேட்டிருப்போம். வால்வோ கார், புதிய மாடல் அறிமுகமானதைத் தொடர்ந்து, அதை வாங்க ஷோரூம் போனார். புதிய காரின் எல்லா புதிய அம்சங்களையும் பார்வையிட்டார். அவருக்குப் பிடித்திருந்தது. எனினும் முக்கியமான சோதனை ஒன்று பாக்கி இருந்தது.

காரில் இருந்த டிஜிட்டல் திரையுடன் தன்னுடைய ஐபோனை இணைத்தார். வீட்டுத் தொலைபேசி எண்ணுக்கு அழைத்துப் பேசினார். அந்தத் தொலைபேசியில் இருந்து தனக்கு அழைப்பு விடுக்குமாறு சொன்னார். எண்களுக்குரிய பெயர்களைத் தன் ஐபோனில் தமிழில் சேமித்து வைப்பது அவர் வழக்கம். தொலைபேசி அழைப்பு வந்ததும் காரின் டாஷ்போர்ட் டிஜிட்டல் திரை கட்டம் கட்டமாகக் காட்டியது. தமிழ் எழுத்துரு அதில் இல்லை. அதை எப்படிச் சொன்னார்? அதுதான், அவ்வப்போது நண்பர்கள் நினைவுகூர்ந்து பேசும் அளவுக்கு இந்நிகழ்வை முக்கியமான கதையாக்கிவிட்டது.

“உங்கள் கார் சரியாக வேலை செய்யவில்லை. பெயரைக் காட்டாமல் இப்படிக் கட்டம் கட்டமாக வருகிறதே! யார் போன் செய்கிறார் எனத் தெரியவில்லை. அது தெரியாமல் நான் எடுக்காமல் விட்டு அது ஏதேனும் அவசர உதவி தேவைப்படும் போனாக இருந்தால் நான் என்ன செய்வேன்? உயிராபத்து நிறைந்த விஷயமாகக் கூட இருக்கலாம். மற்ற எல்லாமே பிடித்திருந்தாலும் இதற்காகவே நான் இந்தக் காரை வாங்கப் போவதில்லை. இப்போதே வாங்கலாம் எனக் கையோடு செக் புக் எடுத்து வந்தேன். இந்த பக் பிக்ஸ் செய்யும் வரை இந்தக் காரை நான் வாங்கப் போவதில்லை”

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!