23. தாய்நாட்டை நோக்கி…
காந்தி இங்கிலாந்துக்குப் புதியவர் இல்லை. ஆனால், 1914 இங்கிலாந்துப் பயணம் அவரை மிகவும் சோர்வாக்கிவிட்டது.
அப்போது எழுதிய ஒரு கடிதத்தில், ‘இந்த நாடு எனக்கு விஷத்தைப்போல் தோன்றுகிறது’ என்று உணர்ச்சிவயப்பட்டார் காந்தி, ‘என் ஆன்மா இந்தியாவில்தான் இருக்கிறது.’
பொதுவாகக் காந்தி எந்த மனிதரையோ, இனத்தையோ, நாட்டையோ வெறுக்கிறவர் இல்லை. ஆனால், நோய்வாய்ப்பட்டிருக்கிற ஒருவருக்குத் தான் இருக்கும் இடம் பெரும் தொல்லையாகத்தான் தெரியும். குறிப்பாக, காந்தியைப்போல் எந்நேரமும் வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருக்கிற ஒருவரை வலுக்கட்டாயமாகக் கட்டிப்போட்டுப் படுக்கவைத்தால் அவரால் சும்மா இருக்கமுடியுமா?
காந்தியும் தன்னுடைய உடல்நிலையைக் குணப்படுத்திக்கொள்வதற்கு ஏதேதோ செய்து பார்த்தார். ஆனால், உணவை மாற்றுவதாலோ வாழ்க்கைமுறையை மாற்றுவதாலோ அவருடைய நோய் குணமாவதாகத் தெரியவில்லை. தொடர்ந்து படுத்த படுக்கையாகத்தான் இருந்தார் அவர்.
Add Comment