Home » சலம் – 24
சலம் நாள்தோறும்

சலம் – 24

24. காட்சி ரூபம்

‘உன்னை நான் எதற்காக நம்ப வேண்டும்? ஏன் உன்னுடன் வர வேண்டும்?’ என்று இரண்டு காதங்கள் கடந்த பிறகு அந்த முனியிடம் கேட்டேன். அவன் வழக்கம் போலச் சிரித்துவிட்டு அமைதியாகவே இருந்தான். நடப்பதை நிறுத்திவிட்டுச் சொன்னேன், ‘எனக்கு இதற்கு நிச்சயமாக பதில் தெரிய வேண்டும்.’

இப்போது அவன் சொன்னான், ‘இதில் எந்த ரகசியமும் இல்லை சாரனே. நீயாகப் போனால் இப்பிறவியில் உன்னால் அவனது இருப்பிடத்தைக் கண்டறிய இயலாது.’

‘இதை நான் நம்ப வேண்டுமா? இதோ பார், அந்த பிராமணன் சர்சுதி தென்படும் தொலைவுக்கு அப்பால் எங்குமே செல்வதில்லை என்று எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். நதியோரம் வசிப்பவன்; ஆனால் நதியில் கால் வைக்க மாட்டான் என்ற குறிப்பு எனக்கொரு கந்தர்வன் மூலமாகக் கிடைத்திருக்கிறது. இது போதாதா? என்றைக்குச் சென்றடைவேன் என்பதுதான் தெரியாதே தவிர, எப்படியும் சந்தித்தே தீருவேன்.’

முனி மீண்டும் சிரித்தான்.

‘நீ சொல்வது சரி. அவன் நதிக்கரையோரம்தான் வசிக்கிறான். ஆனால் நீ அவன் பக்கத்திலேயே போய் நின்றாலும் அவன் அனுமதிக்காமல் உன்னால் அவனைப் பார்க்க இயலாது.’

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!