Home » இரண்டுமில்லை; வேறொன்று!
இன்குபேட்டர்

இரண்டுமில்லை; வேறொன்று!

அண்மையில் குவான்டம் கம்பியூட்டிங் பற்றிய செய்தி அறிக்கைகள் சில ஊடகங்களில் வெளிவந்தன. ஐஐடி மெட்ராஸில் ஆகஸ்ட் மாத முடிவில் குவான்டம் கம்பியூட்டிங் பற்றிய ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பம் குவான்டம் கம்பியூட்டிங்தான் என அறிவித்ததாக ஊடகங்களில் செய்தி அறிக்கைகள் வெளிவந்தன. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒன்பது குவான்டம் கணினிகளில் ஒன்று நெதர்லாந்தில் அமைக்கப் படவுள்ளதாக சென்ற வாரம் நெதர்லாந்து டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. உலகில் பல நிறுவனங்களும் பல்கலைக்கழகழகங்ளும் குவான்டம் கம்பியூட்டிங் துறையில் பல ஆண்டுகளாக ஆய்வில் ஈடுபட்டுள்ளன. இத்தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இன்னும் சில ஆண்டுகளில் பயன்பாட்டில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

குவான்டம் கம்பியூட்டிங் என்றால் என்ன? இத்தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் உள்ள சிக்கல்கள் என்ன? அதன் மூலம் எப்படியான வளர்ச்சிகளைத் தொழில்நுட்பத் துறையில் எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம் எனப் பார்ப்போம்.

குவான்டம் கம்பியூட்டிங் என்பது குவான்டம் இயற்பியலை அடிப்படையாகக் கொண்டது. நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளரான ரிச்சர்ட் ஃபெயின்மன் (Richard Feynman), கிரைமியாவைச் சேர்ந்த சோவியத் கணிதவியலாளர் யூரி இவனோவிஷ் மானின் (Yuri Ivanovich Manin) ஆகிய இருவரும் சுயாதீனமாக உருவாக்கிய கருதுகோள்களின் மூலம் எண்பதுகளில் ஆரம்பித்தது இந்தக் குவான்டம் கம்பியூட்டிங் துறை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!