Home » பாசிசமும் பாயசமும்
தமிழ்நாடு

பாசிசமும் பாயசமும்

“மதச்சார்பற்ற, ஊழலற்ற அரசியல் தான் எங்கள் நிலைப்பாடு. கரப்ஷன் கபடதாரிகளின் மோடி மஸ்தான் வேலை எங்களிடம் எடுபடாது” என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி வி சாலையில் ஞாயிறன்று நடைபெற்ற கட்சியின் முதல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர் கட்சியின் கொள்கைகளை வெளியிட்டார். யாரை எதிர்த்து அரசியல், யாரை முன்னோடிகளாகக் கொண்டு செயல்படப் போகிறார் என்பது குறித்து விரிவாகப் பேசினார்.

நடிகர் விஜய் தனது அரசியல் நுழைவைப் பற்றிச் சொன்னதிலிருந்து அவரை நோக்கி எழுந்த பல கேள்விகள் உண்டு. இவருக்கு என்ன அனுபவம் இருக்கிறது. என்ன விதமான கொள்கைகளைக் கையிலெடுக்கப் போகிறார், யாரை அரசியல் எதிரியாகக் கொண்டு அரசியல் செய்யப்போகிறார் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. இவை அனைத்திற்கும் இவர் தனது முதல் அரசியல் மேடையில் பதிலளித்து இருக்கிறார்.

மத்திய அரசின் மதவாத அரசியல், மாநிலத்தில் ஆளும் திமுகவின் குடும்ப, ஊழல் அரசியல் இரண்டையும் எதிர்ப்பதாக நேரிடையாக அறிவித்திருக்கிறார். மாநிலத்தில் ஆளும் கட்சியை “கரப்ஷன் கபடதாரிகள்” என்று குறிப்பிட்ட அவர் “திராவிடமும் தேசியமும் இரண்டு கண்கள். பாசிசம் என்று சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றன சில கட்சிகள். அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா” என்று கேட்டார்.

“மதம், சாதி, என நம்மைப் பிரிக்கும் பிரிவினை சக்திகள் மட்டும் அல்ல. ஊழல் சக்திகளும் எதிர்க்கப்பட வேண்டும். பிளவுபடுத்தும் சக்திகளை அடையாளம் காண்பது எளிது. ஊழல்வாதிகளைக் கண்டறிவது கடினம். அவர்கள் முகமூடி அணிந்துள்ளனர். அவர்களின் முகமே முகமூடிகள். இத்தகைய போலி சக்திகள் இன்று நம்மை ஆள்கின்றன. திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டை சுரண்டிக் கொள்ளை அடிக்கும் குடும்ப சுயநலக் கூட்டமும் தான் நம் அரசியல் எதிரி. தமிழகத்தில் மாற்று அரசியல் என்று சொல்வது ஏமாற்று வேலை, தாங்கள் செய்ய இருப்பது மாற்ற அரசியல். அதைத் தான் மக்களும் எதிர்பார்க்கிறார்கள்” என்றார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!