Home » ஆபீஸ் – 124
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 124

124 குறியீடு

அறிவுரை என்று எவர் சொல்வதையும் எடுத்துக்கொள்ளாதவன், பாண்டுரங்கன் சொல்படி டைப்ரைட்டர் முன்னால் உட்கார ஆரம்பித்தான். பின்னணி தெரியாததால் விஸ்வநாதன் நிர்மலா லதா கோஷ்டி, என்ன ஆகிற்று இவனுக்கு என்று மூக்கின்மேல் விரலை வைத்தது.

‘என்ன இவுரு பிராக்டீஸ் பண்றதைப் பாத்தா இந்தத் தடவை கண்டிப்பா பாஸ் பண்னிடுவார் போலயிருக்கே’ என்று லதா வாய்விட்டே சொன்னார். அதில் ஓரளவு பாராட்டும் இருந்தது என்றே இவனுக்குத் தோன்றியது.

பாண்டுரங்கன் அவனைத் தம் அறைக்குள் அழைத்து, ‘இதப் பாருங்க. நீங்க பாட்டுக்கும் asdfgfஐயே அடிச்சிக்கிட்டு இருக்காம அப்படியே செண்ட்டன்ஸும் அடிக்க ஆரம்பிங்க’ என்றார்.

அட. நீங்க வேற. அந்தக் கருமத்த அடிக்கத் தெரிஞ்சாதான் நா டைப்பே அடிச்சிடுவேனே. இதுகூட இடதுகைல asdfgf அடிக்க வரா மாதிரி வலதுகைல அந்த வரிசைலியே இருக்கற ;lkjhjவ அடிக்க வராது என நினைத்துக்கொண்டவன், மண்டையை மட்டும் ஆட்டிவிட்டு வந்தான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!