Home » சலம் – 31
சலம் நாள்தோறும்

சலம் – 31

31. பெயர்ச் சொல்

அவனைப் போலொரு சூதற்ற மனிதனைக் காண்பது அபூர்வம். எனக்குச் சாரனின் வெளிப்படைத்தன்மை பிடித்திருந்தது. அச்சமோ அச்சமின்மையோ இல்லாத ஏகாந்த வெளியில் அவன் இருந்தான். அது பிடித்திருந்தது. யாருடைய கருத்தினாலும் அவனது தீர்மானம் அசைவதில்லை என்னும் உறுதிப்பாடு பிடித்திருந்தது. அதர்வனுக்கு நானளித்த சாபத்தை நிறைவேற்றுவதற்கெனவே இயற்கை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்த மனிதனாக அப்போது அவனைக் கண்டேன். உணர்ச்சிமயத்தில் எனக்குக் கண் கலங்கியது.

அவன் சிரித்துவிட்டுச் சொன்னான், ‘உன் சாபம் வென்றாலும் தோற்றாலும் அது உன்னோடு போகும். என் காரியத்தை நான் முடித்துவிட்டுச் சென்றால் எனக்கு அது போதும்.’

‘ஆனால் இரண்டும் வேறு வேறல்ல சாரனே.’

‘என் சகோதரி அப்படி நினைத்துத்தான் கவலைப்படுகிறாள் என்று தோன்றுகிறது. உன்னால் என் காரியம் கெட்டுவிடக் கூடாதென்று நினைக்கிறாள். அதனாலேயே உன்னைவிட்டுப் போய்விடச் சொல்கிறாள்.’

‘பதிலுக்கு நீ என்ன சொன்னாய்?’

‘முனியே, பட்சி அவளுக்குக் கருவி. எனக்கு அது கிடைத்தால் ஒரு பொழுதுக்கு உணவு. என்னால் வேறென்ன முடியும்? நான் ஒன்றும் சொல்லி அனுப்பவில்லை. எனக்கு அதற்கு வழியுமில்லை. அவளுக்குத் தோன்றியதை அவள் சொல்லிவிட்டாள். எனக்குத் தோன்றியதை நான் செய்வேன்.’

‘நல்லது சாரனே. சிறிது நேரம் உன் முகமாற்றத்தைக் கண்டு நான் குழப்பமடைந்துவிட்டேன்.’

‘மாறாமல் என்ன செய்யும்? நெருங்க இயலாத தொலைவில் அவள் காற்றோடு கலந்திருக்கிறாள். அவள் கலந்த காற்றும் என்னை நெருங்க இயலாத தொலைவில் நானிருக்கிறேன். ஆனால் என்னைத் தவிர இன்னொரு நினைவிருக்கிறதா பார் அவளுக்கு.’

‘உனக்கும் அப்படித்தானே?’

‘சரிதான், அதைவிடு. நான் தெளிவாகவே கேட்டுவிடுகிறேன். நீ அந்த பிராமணனின் கையாளா?’

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!