கற்கை நன்றே
ஏஐ வளர்ந்துகொண்டே இருக்கிறது. அதன் ஆற்றல் எல்லைகள் தொடர்ந்து விரிவடைகின்றன. இவையாவும் அதிவிரைவாய் நிகழ்கின்றன. இதன் மூலம் நாம் அனுபவிக்கும் பலன்கள் பல. அதேவேளையில் முக்கியமான சவால் ஒன்றும் எழுந்துள்ளது. “எவ்வாறு நம்மைத் தொடர்ந்து அப்டேட் செய்துகொள்வது?”. ஏ.ஐ துறைசார்ந்து பணியாற்றும் அனைவருமே சந்திக்கும் சவால் இது.
டிஜிட்டல் துறையில் பெருநிறுவனங்கள் சில உள்ளன. ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள். முன்பெல்லாம் மிக முக்கிய அறிவிப்புகள் இவர்களிடமிருந்து தான் வரும். எனவே புதிதாக என்னென்ன வந்துள்ளது என்றறிவது எளிமையாக இருந்தது. ஆனால் ஏ.ஐ வந்தபின் இந்த நிலைமை மாறியுள்ளது.
சாட்ஜிபிடி வரும்வரை எத்தனை பேருக்கு ஓப்பன்ஏஐ என்றொரு நிறுவனத்தைப் பற்றித் தெரிந்திருக்கும்? ஓப்பன்ஏஐ தான் என்றில்லை. மேகங்களற்ற நள்ளிரவு வானில் மின்னும் எண்ணற்ற நட்சத்திரங்களைப் போல, பல்வேறு நிறுவனங்கள் வந்துவிட்டன. தங்கள் பங்கிற்கு வியக்கவைக்கும் ஏ.ஐ கருவிகளை வெளியிடுகின்றனர். ஒவ்வொரு நட்சத்திரமும் அழகு தானே.
Add Comment