Home » உடலுக்கு வெளியே எலும்புக்கூடு
இன்குபேட்டர்

உடலுக்கு வெளியே எலும்புக்கூடு

மனித உடலின் திறனுக்கு ஓர் அளவு உண்டு. உதாரணமாக ஒரு பொருளைத் தூக்கிக் கொண்டு நடக்க வேண்டுமானால் அப்பொருளின் எடையும் அதன் அளவையும் பொறுத்தே நம்மால் அக்காரியத்தைச் செய்ய முடியும். அத்துடன் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட உடல்வாகையும் பொறுத்து அவர்களால் தூக்கிச் செல்லக் கூடிய பொருளின் எடையும் அளவும் மாறுபடும். எமது இயற்கையாகவுள்ள உடலின் திறனை அதிகரிக்கும் புறக்காரணிகள் மூலம் மேலும் அதிகம் எடையுள்ள பொருளைத் தூக்கக் கூடியதாக இருக்கும். அதற்கான தொழில்நுட்பம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. அதனை ஆங்கிலத்தில் Exoskeleton என்று சொல்வார்கள். உடலுக்கு வெளியே உள்ள எலும்புக்கூடு என்பது இச்சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பாகும்.

மேலே குறிப்பிட்டுள்ள ஒரு பொருளைத் தூக்கும் செயல், ஓர் உதாரணம் மட்டுமே. நமது அன்றாடச் செயல்பாடுகளில் பலவற்றுக்கு எக்ஸோஸ்கெலிட்டன் தொழில் நுட்பம் உதவி புரியலாம். இத்தொழில் நுட்பம் எமது உடல் உறுப்புகளின் திறனை அதிகரிப்பது மட்டுமல்லாது எமது உடல் உறுப்புகள் பாதிக்கப்படாமல் இருக்கவும் உதவி புரியும் என்பது குறிப்பிடத் தக்கது. அது மட்டுமல்லாமல் இந்த எக்ஸோஸ்கெலிட்டன் தொழில்நுட்பம் மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையிலும் பாரிய மாற்றங்களைக் கொண்டு வரக் கூடியதாகும். தற்போதுள்ள எக்ஸோஸ்கெலிட்டன் தொழில்நுட்பங்களில் சிலவற்றையும் அவற்றின் பயன்பாடுகளையும் பார்ப்போம்.

ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் அலுவலகங்களைக் கொண்ட ஜெர்மன் பயோனிக் (German Bionic) கனமான பொருள்களை நகர்த்தும் தொழிலாளர்களுக்கான அப்போஜீ (Apogee) எக்ஸோஸ்கெலிட்டனைத் தயாரிக்கிறது. இந்த எக்ஸோஸ்கெலிட்டன் செயற்கை நுண்ணறிவின் மூலம் தொழிலாளரின் வேலை செய்யும் முறைகள் பற்றிக் கற்றுக் கொண்டு அதற்கேற்ப தனது செயல்முறையை வடிவமைக்கக் கூடியதாகும். இந்த எக்ஸோஸ்கெலிட்டனை சுகாதாரத்துறையிலும் பயன்படுத்தலாம். முக்கியமாக நோயாளிகளைத் தூக்குவது போன்ற வேலைகளைச் செய்வோருக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!