Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 34
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 34

34. எனக்கு ஒரு துடைப்பம் கொடுங்கள்

இந்திய ஊழியர் சங்கத்தின் தலைமையகம் பூனாவுக்கு வெளியிலிருந்த கிராமப்புறச் சூழல் கலந்த புறநகர்ப் பகுதியொன்றில் அமைந்திருந்தது. கோகலேவின் விருந்தினராகப் பூனாவுக்கு வந்த காந்தி அங்குதான் விருந்தினராகத் தங்கியிருந்தார்.

ஆனால், மற்ற விருந்தினர்களைப்போல் இவர் கொடுத்ததைச் சாப்பிட்டுக்கொண்டு, அரட்டையடித்துக்கொண்டு ஓய்வெடுக்கவில்லை. அந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் சமையல், துணி துவைத்தல், தூய்மைப்படுத்தல் போன்ற பணிகளுக்கு வேலைக்காரர்களை அமர்த்தியிருப்பதைக் கேள்வி கேட்டார், ‘இதையெல்லாம் நாமே செய்துகொள்ளலாமே’ என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

அவருடைய இந்த அறிவுரைகள் இந்திய ஊழியர் சங்க வட்டாரங்களில் சலசலப்புகளை உண்டாக்கிக்கொண்டிருக்கிற நேரத்தில், காந்தி அடுத்தக் கட்டத்துக்கு முன்னேறிவிட்டார். அதாவது, சும்மா இருக்கிற நேரத்தில் நானே இங்குள்ள கழிப்பறைகளையெல்லாம் தேய்த்துக் கழுவித் தூய்மைப்படுத்துகிறேன் என்று கிளம்பிவிட்டார். இதைப் பார்த்த சங்க உறுப்பினர்களும் மற்ற பணியாளர்களும் திகைத்துப்போனார்கள்.

காந்தியைப் பொறுத்தவரை தூய்மைப்படுத்தும் பணி என்பது சிலருக்குமட்டும் ஒதுக்கப்படவேண்டிய இழிவான வேலை இல்லை. ஒவ்வொருவரும் தாங்கள் வசிக்கும் பகுதியை, அதன் சுற்றுப்புறங்களை, குறிப்பாகத் தங்கள் கழிப்பறையைத் தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும், அதுதான் நலமான வாழ்வுக்கு வழிவகுக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!