Home » மாசு, காசு, பட்டாசு
இந்தியா

மாசு, காசு, பட்டாசு

தீபாவளியையும் தலைநகர் தில்லியில் காற்று மாசுபடுதலையும் பிரிக்க முடியாது. இந்த ஆண்டு, தீபாவளியன்றும் அதற்கு அடுத்த நாளும் தில்லியின் காற்று தரக் குறியீடு (AQI) சில இடங்களில் நாநூறுக்கும் அருகில் வந்து விட்டது. அதிகபட்சமாக 446 என்ற நிலையை எட்டியது. முக்கிய இடங்களில் தெரிவுநிலை (VISIBILITY) பத்து மீட்டர் அளவில் தான் இருந்தது. புகழ் பெற்ற நினைவிடமான இந்தியா கேட் புகைமண்டலத்தால் மூடப்பட்டு மறைந்தே விட்டது. வியா நகர், அசோக் விஹார், ஆனந்த் விஹார், விவேக் விஹார், பாவனா போன்ற இடங்களில் அதிக பட்சமாக இது பதிவாகியிருந்தது. என்னதான் பனி மூட்டம் போல் காணப்பட்டாலும், வெப்பநிலை எப்பொழுதும் இருப்பதை விட ஐந்து பாகை அதிகமாகத் தான் இருந்தது.

இந்தக் காற்றின் தரக் குறியீடு நூறுக்கும் கீழே இருந்தால் நல்லது. இருநூறுக்கு மேல் இருந்தால் மோசம் என்றே கொள்ளப்படுகிறது. இந்நிலையில் தில்லியில் எந்தப் பகுதியிலும் முந்நூற்றுக்கும் கீழே இல்லவே இல்லை. நகரெங்கும் பதிமூன்று இடங்களில் மாசுக்கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப் பட்டிருந்தன. ஆனால் அவை எல்லாம் போதாது. தொண்டை அடைப்பு, கண் எரிச்சல், இருமல், மூக்கில் அரிப்பு எனப் பலவிதமான அவஸ்தைகளை மக்கள் அனுபவிக்கின்றனர். தலைநகர் இப்பொழுது ஒரு வாயுக்கிடங்கு போல இருக்கிறது என்கிறார் ஒரு தில்லிவாசி. மத்திய மாசுகக்கட்டுப்பாடு வாரியம் (CPCB) தங்களால் ஆன எல்லா முயற்சிகளும் எடுத்து வருவதாகவும் பொது மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இது கட்டுக்குள் வருவது சாத்தியம் என்று சொல்லி விட்டது.

தீபாவளி பண்டிகையின் பொழுது இரண்டு நாள்கள் மக்கள் வாண வேடிக்கை வெடித்துக் கொண்டாட்டமாக இருக்கிறார்கள். வெடி வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டபிறகும் அவர்களுக்கு வெடிகள் கிடைக்கின்றன. வெடிக்கத் தான் செய்கிறார்கள். மாசற்ற பசுமை வெடிகளை வெடிக்க அவர்களை வேண்டியபிறகும் இது தொடர்கிறது. ஆனால் பொதுமக்கள் இதற்கு வேறொரு காரணமும் சொல்கிறார்கள். “நாட்டில் அனைவருக்கும் பொதுவான ஓர் இந்துப் பண்டிகை இது. இரண்டு நாள்கள் மட்டுமே இந்தக் கொண்டாட்டம். மற்ற முந்நூற்று அறுபத்து மூன்று நாட்களில் அரசாங்கம் என்ன செய்கிறது. தில்லியில் போக்குவரத்து நெரிசல் உலகப் பிரசித்தம். அதற்கு இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்கள் எத்தனை பேர். சாலையெங்கும் வாகனங்கள். அதில் வருடமெங்கும் புகை. அப்போதும் காற்று மாசுபட்டுக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் இந்தத் தீபாவளி மட்டுமே இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டுவது வேடிக்கை” என்கின்றனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!