செம்பருத்தி
எழுத்துரு உருவாக்கத்தில் அழகான எழுத்துகளை வடிவமைப்பது ஒரு பாதி வேலை. அதைக் கணினியில் பயன்படுத்தும் விதத்தில் மாற்றுவது மறு பாதி வேலை. எழுத்துரு வடிவமைப்பாளர், எழுத்துருப் பொறியாளர் என்று இரு வேறு வேலைகள் இவை. இன்னும் சில நுட்பமான வேலைகளும் இத்துறையில் உள்ளன. அது பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் குறைவாகத்தான் உள்ளது.
ஆண்டு தோறும் வட இந்தியாவில் நடக்கும் எழுத்துரு மாநாடுகளில் தவறாமல் கலந்து கொள்வார் முத்து. உதயகுமார், அச்யூத் பாலவ், காலிகிராபி செய்யும் ஸ்ரீகுமார் போன்ற துறை சார்ந்த வல்லுநர்களுடன் நட்போடு பழகுவார். வட இந்தியாவில் நடக்கும் மாநாடுகள் பலவற்றில் அவர்களோடு சேர்ந்து பல உரைகளை வழங்கி, பயிற்சிப் பட்டறைகளை நடத்தியுள்ளார். தென்னிந்தியாவில் அப்படியான மாநாடுகள் நடப்பதும், தென்னிந்தியர்கள் வட இந்திய மாநாட்டில் கலந்து கொள்வதும் அரிதுதான்.
முத்துவைப் போல இத்தனை மொழிகளைக் கையாளும் நபர்கள் என்று எத்தனை பேரை நம்மால் சுட்டிக் காட்ட இயலும்? அது அவருடைய தனிப்பட்ட பலமாகவே இருக்கிறது. அதன் விளைவாகவே வேறு யாரும் யோசிக்காத கோணம் அவருக்கு மட்டும் உதிக்கிறது. அவருடைய அடுத்த செயலி அப்படியான ஒரு புது முயற்சி.
Add Comment