Home » மகாராஷ்டிரத் தேர்தல்: பாஜகவுக்கு விருந்தா? காங்கிரசுக்கு மருந்தா?
இந்தியா

மகாராஷ்டிரத் தேர்தல்: பாஜகவுக்கு விருந்தா? காங்கிரசுக்கு மருந்தா?

மகாராஷ்டிர மாநில சட்டசபைக்கான தேர்தல் நவம்பர் 20ஆம் தேதி நடக்கவிருக்கிறது. சுமார் பத்து கோடி வாக்காளர்கள் பங்குபெறும் இந்தத் தேர்தலில் நவம்பர் 23ஆம் தேதி யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்பது தெரிந்துவிடும். இறுதிக்கட்டக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்யப்போகும் கடைசி நிமிடங்கள் வரை நடந்தன. தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலம் மகாராஷ்டிரா. எனவே இந்தத் தேர்தல் இரண்டு தரப்புக்கும் மிக முக்கியமானது.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்குப் பெயர் மகா விகாஸ் அகாதி. அதில் காங்கிரஸ் தவிர்த்து உத்தவ் சிவசேனா மற்றும் சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகள் இருக்கின்றன. இறுதிவரை குழப்பங்களோடே நீடித்தது கூட்டணிப் பேச்சுவார்த்தை. முடிவில் மூன்று கட்சிகளும் குறைந்தது 85 இடங்களில் போட்டியிடுவது என்றும் மீதமுள்ள 38 இடங்கள் யாருக்கு என்பதைக் கடைசியாகப் பார்த்துக்கொள்ளலாம் என்றும் குழப்பமான முடிவுக்கு வந்தார்கள். இறுதியில் காங்கிரஸ் 103, உத்தவ் சிவசேனா 87, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் 82 என 272 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றன. மீதமுள்ள பதினாறு தொகுதிகளில் கூட்டணி சார்பாக யார் போட்டியிடப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.

பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியாவது தெளிவாக இருக்கிறதா? 150 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்திருந்த பாஜக 146 இடங்களில் போட்டியிடுகிறது. மீதமுள்ள நான்கு இடங்களை உள் ஒதுக்கீட்டு அடிப்படையில் லெட்டர் பேட் கட்சிகளுக்குக் கொடுத்து விட்டார்கள். ஏக்நாத் சிவசேனா 80 தொகுதிகளிலும், அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் மீதமுள்ள 58 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!